Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
today special
கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்கள்,குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம் தெரியுமா?
கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்கள்,குழந்தை கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம் தெரியுமா?
கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.
கிருஷ்ண ஜெயந்தி பற்றிய 30 தகவல்களை இன்று பார்க்கலாம்.
1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.
2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.
3.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக
செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.
4.
சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும்
ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக்
கொண்டாடப்படுகிறது.
5. கிருஷ்ணர் தமிழ்நாட்டில் கண்ணன் என்றும் வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.
6. கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களும் உண்டு.
7. கிருஷ்ண இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.
8.
கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல்
லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால்திரட்டு, நாட்டு
சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.
9.
கிருஷ்ண ஜெயந்தியன்று குழந் தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து
வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ் ணரே வீட்டுக்கு
வருவதாக ஐதீகம்.
10. கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் அஷ்டமி ரோகிணி என்றழைக்கிறார்கள்.
11.
கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து
விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ராசலீலா என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது
வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.
12.
கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது.
எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.
13.
கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தா
வனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும்
வாழ்ந்தார்.
>15.
கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற கீதகோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம்,
கிருஷ்ண கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும்.
16.
கிருஷ்ண ஜெயந்தியன்று சிறுவர் – சிறுமிகளை கண்ணன், ராதைபோல வேடமிட்டு
ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள்
புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
17.கண்ணனை
வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது.
இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள். அரசியல் வாதிகளுக்கு நிர்வாகத் திறமை
அதிகரிக்கும்.
18. பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.
19. விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும்.
20.
தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும்.
கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில்
ஆற்றல் பெருகும்.
21. கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.
22. கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.
23.
பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத்
தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.
24. கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
25. ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணரின் அருள் பார்வை நம் மீது படும்.
26.
அர்த்த சாஸ்திரத்தை எழுதிய சாணக்கியர், மருத்துவ தொழிலை தொடங்குபவர்கள்
கிருஷ்ணனை வழிபட்ட பிறகே தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.
27.
அலெக்சாண்டருடன் போரிட்டு வென்ற போரஸ் தனது படைகளுக்கு முன்பு கிருஷ்ணனின்
உருவத்தை நிறுத்தியிருந்தார். போரில் வெற்றி பெற கிருஷ்ணனே காரணம் என
கருதினார்.
28. யமுனை ஆற்றங்கரையில் கிருஷ்ண வழிபாடு இருந்ததாக மெகஸ் தானிஸ் தனது வரலாற்று குறிப்புகளில் எழுதியுள்ளார்.
29.
சிலப்பதி காரத்தில் கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் என்றும், மனைவி நப்பின்னை
என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நப்பின்னை யாதவர் குலத்தைச் சேர்ந்தவள்
என்றும், ராதையை கிருஷ்ணனின் காதலி என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ராதை
மற்றும் ருக்மணியை விட நப்பின்னை மேன்மையானவள் என்றும் தமிழ் இலக்கியங்கள்
கூறுகின்றன. நப்பின்னையை ஆழ்வார்களும் பாராட்டி யுள்ளனர்.
30.
ஒரு சமயம் அசுரர்கள் சூரியனை தடுத்து மறைத்து விட்டால் பூமி இருளடைந்து
தவித்தது. அப்போது கிருஷ்ண பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் கிருஷ்ண
பரமாத்மா சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறு
குறிப்பிடுகிறது.வெண்ணை
திருடும் கிருஷ்ணரை விரும்பாத பெண்களே கிடையாது. அப்படி அனைவரின் மனதிலும்
இடம் பிடித்த கண்ணனின் திருபாதத்தை வீட்டில் ஏன் கோலமாக வரைகிறோம்
தெரியுமா? நாரத முனிவர் ஒரு சமயம் ஒவ்வொரு கிருஷ்ண பக்தர்களின்
வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு
அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்
தில்
ஒவ்வொரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை
சிவபெருமானே தரிசித்து பரவசமும், ஆனந்தமும் அடைந்தார். இப்படி ஒரே
நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ண பரமாத்மா. நான்
எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை
பக்தர்களையும் பார்ப்பேன், காப்பேன் என்பதைக் குறிப்பிடவே, ஒவ்வொருவர்
வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ண திருவடிக் கோலம் போடுகிறார்கள்.
கிருஷ்ணர் 8 வகையாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
8 வகை கிருஷ்ணர்
சந்தான கோபால கிருஷ்ணர் : யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.
பால கிருஷ்ணன் : தவழும் கோலம்.
காளிய கிருஷ்ணன் : காளிங்க மர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.
கோவர்த்தனதாரி : கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.
ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்) : வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.
முரளீதரன் : இதில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன், ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதனாய் நின்றிருக்கும் திருக்கோலம்.
மதன கோபால் : அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன்.
பார்த்தசாரதி : அர்ஜுனனுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.
8
வகைகளில் காட்சி தரும் கிருஷ்ணரின் பாதத்தை வீட்டில் வைத்து பூஜித்தால்
குழந்தை பாக்கியம் கிட்டும். சந்தோஷத்திற்கு குறைவே இருக்காது.








