ராகு கேது பெயர்ச்சி பலன் : 18 ஆண்டுகள் அள்ளிக்கொடுக்கப்போகும் ராகு மகாதிசை..யாருக்கு குபேர யோகம்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


ராகு கேது பெயர்ச்சி பலன் : 18 ஆண்டுகள் அள்ளிக்கொடுக்கப்போகும் ராகு மகாதிசை..யாருக்கு குபேர யோகம்:

 

திடீர் பணவரவு எதிர்பாராத யோகத்திற்கு சொந்தக்காரர் ராகுதான். குப்பை மேட்டில் இருப்பவரைக் கூட கோபுரத்தில் அமரவைப்பார்.

அந்த அளவிற்கு ராகு கொட்டிக்கொடுப்பார். ஒருவருக்கு திடீரென்று ராஜயோகம் வரும் வருமானம் அள்ளி கொட்டும். பணத்தை எண்ணி வைக்க இடமிருக்காது அந்த அளவிற்கு வரும் அதற்குக் காரணம் அவருக்கு ராகு தசை வந்திருக்கும். தசாபுத்தியில் அதிக காலம் சுக்கிரதிசைதான் 20 ஆண்டுகள் நடைபெறும். சனி தசை 19 ஆண்டுகள் நடக்கும். ராகு திசை ஒருவருக்கு 18 ஆண்டுகள் நடைபெறும். இந்த 18 ஆண்டுகளில் ராகு நல்ல நிலையில் இருந்தால் அவரை மிகப்பெரிய செல்வந்தராக மாறுவார்.

ராகு நிழல் கிரகம். பிரம்மாண்ட நாயகனான நவகிரகங்களின் தலைவனான சூரியனின் ஒளியை மறைக்கும் சக்தி படைத்தது ராகு கேது. அதே போல சந்திரனின் ஒளியை மறைக்கும் சக்தி படைத்தது ராகு கேது கிரகங்கள். ஒருவருக்கு திருமணம், குழந்தை பாக்கியம் தடை ஏற்பட காரணம் ராகு கேது கிரகங்கள்தான். சர்ப்ப தோஷம் இருந்தால் திருமண தடை, குழந்தை பாக்கிய தடை ஏற்படும். ராகு சனியைப் போலவும் கேது செவ்வாயைப் போலவும் வேலை செய்வார். ராகு ஒருவரின் ஜாதகத்தில் சுப கிரகங்களுடன் இருந்தால் சுப பலன்களை தருவர். அதே நேரத்தில் செவ்வாய், சனி தொடர்பு ஏற்படும் போது சாதகமற்ற பலனை தருவார்.

சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சிக்கு அடுத்தபடியாக ராகு கேது பெயர்ச்சியை மக்கள் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். காரணம் ராகு கேது ஒருவரின் ராசியில் ஒன்றரை ஆண்டுகள் நின்று பலனைக் கொடுக்கும். ராகுவைப் போல கொடுப்பாருமில்லை... கேதுவைப் போல கெடுப்பாருமில்லை என்பார்கள். ராகு எதைக் கொடுத்தாலும் அள்ளிக் கொடுப்பார். அதே நேரத்தில் ராகு பலமிழந்து இருந்தால் எதற்கெடுத்தாலும் தடையை ஏற்படுத்துவார். திருமண தடை, குழந்தை பாக்கியத்தில் தடை, வசதி வாய்ப்பில் தடையை ஏற்படுத்துவார். ராகு தசை நடந்தால் என்ன பலன் எந்த லக்னகாரர்களுக்கு நல்லது என்று பார்க்கலாம்.

ராகு பிரம்மிக்கத் தக்க கிரகம். கொடுப்பவரும் அவரே தடுப்பவரும் அவரே அவரை புரிஞ்சுக்கவே முடியாது. மேஷம் விருச்சிகம், தனுசு மீனம், கடகம் சிம்மம், ஆகிய ஆறு லக்னங்களுக்கு சாதகமான பலன்களை தருவதில்லை. அவர் நல்லது செய்ய வேண்டுமெனில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ராகு ஆகிய வீடுகளில் இருக்கும் ராகு நல்லதை செய்வார். தான் இருக்கும் வீட்டின் அதிபதியை போல ராகு செயல்படுவார். ராகு திசை ராஜயோகங்களில் முதன்மையானது ராகு மிகச்சிக்கலான காலகட்டத்தில்தான் கெடுதல் செய்வார். சுக்கிரன், புதன், சனி ஆகிய கிரகங்களில் லக்னகங்களான ரிஷபம், துலாம்,மிதுனம்,கன்னி, மகரம், கும்பம் சனியின் நண்பர்களான சுக்கிரன், புதன் லக்னங்களுக்கு ராகு திசை நல்லது செய்யும் கெடுதல் செய்யாது.

சுபத்துவமான ராகு ஒருவருக்கு ராஜயோகத்தை அள்ளித்தருபவர். ஒருவருக்கு ராகு பலன் தர வேண்டும் என்றால் இயற்கை சுபரின் வீட்டில் இருக்க வேண்டும். திடீர் பிரபலம் ராகுவினால் நடக்கும். சினிமா, அரசியல் என பிரபலம் அடைய ராகுதான் காரணம். ராகு திசை நடந்தால் கடல் கடந்து வெளியே செல்லுதல். வெளிநாடு செல்லும் யோகத்தை தருவார். வெளிமாநிலம் போய் பொருள் தேட வைப்பார். புத்திசாலித்தனமான தன லாபத்தை தருவார். உங்களுக்கு வருமானத்தை கொட்டிக் கொடுத்து உங்களை திக்கு முக்காட வைப்பார். நல்லவன் கெட்டவன் என்று ராகு பார்ப்பதில்லை. பூர்வ புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் எந்த வயதில் அனுபவிக்கப் போகிறீர்கள் என்று உணர்த்துபவர் ராகுதான். பணம் கூரையை பிச்சிச்கொண்டு கொண்டும் என்று சொல்வது அவருக்கு சரியாக இருக்கும்.

ராகு பலமான இடத்தில் அமர்ந்து சுபர் சேர்க்கை, சுபர் பார்வை பெற்றிருந்தால் குழந்தை பருவத்தில் ராகு திசை நடந்தால் உற்சாகமாக இருப்பார்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாகவும் அறிவாளிகளாகவும் இருப்பார்கள். உயர்கல்வி யோகம் அமையும். மத்திம வயதில் ராகு திசை நடந்தால் பணவருமானம் அதிகரிக்கும் கொடுக்கும் ராகு கூரையை பிய்த்துக்கொண்டு கொடுப்பார். தொழில் முன்னேற்றம் ஏற்படும். பஞ்சனையில் படுக்கும் வாய்ப்பை ராகு தருவார். புகழ் வெளிச்சம் பரவும்.

குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் வீட்டில் அமரும் போது அவர்களின் காரகத்தை செய்வார். மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஐந்து இடங்களில் இருக்கும் ராகு சுயமான நன்மை செய்வார். சுபர் தொடர்பு இருந்தால் மேன்மையான பலன் கிடைக்கும். ராகுவை குரு பகவான் பார்த்தால் அவர் கெடுதல் செய்ய மாட்டார்.

ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் இருக்கும் ராகு பலமற்ற நிலையில் இருந்தால் சில நேரங்களில் கெடுதல் செய்யும். வம்பு வழக்கு நோய் கடன் போன்ற பலன்களை கொடுப்பார். ராகுவிற்கு இடம் கொடுத்தவர் வலிமை பெற்றால் ஆட்சி உச்சமாக இருந்தால் அளப்பறிய நன்மைகளை செய்வார் ராகு. தர்ம கர்மாதி எனப்படும் ஒன்பது பத்து இடங்களில் இடங்களில் இருந்தால் சாரம் பெற்று அமர்ந்தால் அம்சமான பலன்களை கொடுப்பார்.

ராகு பகவான் பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பாக இருக்க கூடிய ஆற்றல் உண்டாகும். இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை நல்ல அறிவாற்றல், புக்தி கூர்மை, ஸ்பெகுலேஷன் மூலம் தன சேர்க்கை உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் எதிர்பாராத தனசேர்க்கை, புதிய வாய்ப்புகள் தேடி வரும் அமைப்பு, எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் வசதி வாய்ப்புகள், எதிர்பாராத தனசேர்க்கைகள் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

ராகுபகவான் ஒருவரின் ஜாதகத்தில் பலமிழந்து தீயவர்களின் சேர்க்கை பெற்று இருந்தால் இருந்தால் குழந்தை பருவத்தில் ராகு திசை நடைபெற்றால் உடல் நல பாதிப்பு ஏற்படும். பெற்றோர்களுக்கு உடல்நலம் பாதிக்கும். கல்வியில் தடையும், தீயவர்களின் நட்பும் ஏற்படும். சிலருக்கு திருமண தடையும் அவப்பெயரும் ஏற்படும். முதிய பருவத்தில் நடந்தால் உண்ணும் உணவே விஷமாகும்.ஜாதகத்தில் 6ஆம் வீடு 8 வீடுகளில் சனி செவ்வாய் இருந்து ராகு திசை நடக்கும் காலங்களில் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்.

ஒவ்வொரு தசைக்கும் ஒன்பது கிரகங்களும் ஒன்பது புத்திகளாக ஆட்சி செலுத்துகின்றன. புக்தி என்பது தசையில் ஒரு பாகம். அதாவது ஒரு கிரஹ தசைக்குள் மற்றைய கிரஹங்கள் வரிசையாக வந்து ஆட்சி செலுத்தும் காலம் புக்தி. தசை எந்தக் கிரஹத்தினுடையதோ, அதன் புக்தி முதலில் ஆரம்பமாகும். உதாரணமாகச் தசையானாலும் புக்தியானாலும் கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன் என்ற முறையிலே வரிசையாகத்தான் வரும். ராகு தசை ஆரம்பித்தால் முதலில் ராகு திசை தொடங்கும். தொடர்ந்து குரு, சனி,புதன், சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய் வரும்.

ஏதாவது தவறு நடந்தால் அவனுக்கு புத்தி சரியில்லை அதான் அப்படி பண்ணிட்டான் என்பார்கள். தசா நாதனும் புத்தி நாதனும் நன்றாக இருந்தால் வாழ்க்கை அதுபாட்டுக்கு நன்றாக போகும். ஜாதகத்தில் ராகுவின் அமர்வைப் பொருத்து அவருக்கு நன்மைகளும் தீமைகளும் நடைபெறும்.

ராகு திசையில் ராகுபுக்தி 2வருடம் 8மாதம் 12நாட்கள் நடைபெறும். ராகு பலம் பெற்று அதன் சுயபுக்தி காலங்களில் மனதில் நல்ல உற்சாகமும், எடுக்கும் காரியங்கள் யாவற்றிலும் வெற்றியும், அரசு வழியில் ஆதரவும், செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வுகளும் உண்டாகும், குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். வீடு வண்டி வாகனம் வாங்கலாம். ராகு பலமிழந்திருந்தால் மனநிலையில் பாதிப்பு, தீராத நோயினால் அவதிப்படும் நிலை ஏற்படும் பிறந்த ஊரை விட்டும் உற்றார் உறவினர்களை விட்டும். குடும்பத்தை விட்டும் அன்னியர் வீட்டில் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.

ராகுதிசையில் குரு புக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும். ஜாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று அமையப் பெற்றால் பணவரவும், சமுதாயத்தில் பெயர் புகழ்,செல்வம் செல்வாக்கு உயரும். சொந்த ஊரிலேயே வீடுமனை, வண்டி வாகன வசதிகளுடன் வாழக் கூடிய யோகம் அமையும். அரசு வழியில் உயர் பதவிகளும், பெரியவர்களின் ஆசியும் கிட்டும். குருபகவான் பலமிழந்து அமையப் பெற்றால் புத்திர பாக்கியம் தடை ஏற்படும். தொழில் உத்தியோகத்தில் அவப்பெயர் குடும்பத்திலுள்ளவர்களுக்கு நோய்கள் உண்டாகும்.

ராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும். சனிபகவான் பலம் பெற்றிருந்தால் சுகமான வாழ்க்கை, சுப நிகழ்ச்சிகள் கைகூடும். தன தான்ய அபிவிருத்தி, தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆற்றல், ஆடை ஆபரண சேர்க்கை, அசையா சொத்துக்கள் வாங்கலாம். சனிபகவான் பலமிழந்து புக்தி நடைபெற்றால் எடுக்கும் காரியங்களில் தடை ஏற்படும். புத்திரதோஷம், வீண் வம்பு வழக்குகள், கடன் தொல்லையால் அவமானம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.

ராகுதிசையில் புதன் புக்தியானது 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும். புதன் பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல வித்தைகளிலும் கல்வி நிலையிலும் உயர்வு ஏற்படும். மனைவி பிள்ளைகளால் சிறப்பு புதுவீடு கட்டி குடி புகும் பாக்கியம் உண்டாகும். புதன் பலமிழந்திருந்தால் குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு, அரசு வழியில் பிரச்சனை, பகைவர்களால் தொல்லை ஏற்படும்.

ராகுதிசையில் கேதுபுக்தியானது 1 வருடம் 18 நாள் நடைபெறும். கேது பலம் பெற்று நின்ற வீட்டதிபதியும் நல்ல நிலையில் அமையப்பெற்றால் வண்டி வாகனம் ஆடை ஆபரண சேரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும். கேது சரியில்லாத நிலையில் இருந்தால் கணவன் மனைவியிடையே பிரச்சனை, பூமி மனை வண்டி வாகனங்களால் நஷ்டம், விஷத்தால் கண்டம் ஏற்படும்.

ராகுதிசையில் சுக்கிரபுக்தி 3 வருடங்கள் நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகள், உத்தியோக நிலையில் உயர்வு, புகழ் பெருமை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை வண்டி வாகன யோகம் திருமண சுபகாரியம் நடைபெறும் வாய்ப்பு கலை துறையில் சாதனை புரிந்து வெற்றி பெற கூடிய ஆற்றல் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் பெண்களால் அவமானம், சர்க்கரை வியாதி, திருமணத் தடை, நினைத்த காரியங்களில் தோல்வி, பணநஷ்டம், இல்லற வாழ்வில் பாதிப்பு ஏற்படும்.

ராகுதிசையில் சூரிய புக்தி 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும். சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகள் கிடைக்கும். நல்ல தைரியம் துணிவு தந்தை வழி உறவுகளால் மேன்மை, செய்யும் தொழில் வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சூரியன் பலமிழந்திருந்தால் தலைவலி, இருதய கோளாறு தொழில் வியாபாரத்தில் நஷ்டம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும்.

ராகுதிசையில் சந்திர புக்தி 1 வருடம் 6 மாதம் நடைபெறும். சந்திரன் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, நல்ல மன உறுதி ஏற்படும் வண்டி வாகன யோகம் அமையும். கடல் கடந்து அந்நிய நாட்டிற்கு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்படும். தாய் வழியில் மேன்மை உண்டாகும். பொருளாதாரமும் உயரும். சந்திரன் பலமிழந்திருந்தால் தாய்க்கு கண்டம் தாய் வழி உறவுகளிடம் பகை ஏற்படும். நீரினால் கண்டம் கடல் கடந்து செய்யும் பயணங்களால் அலைச்சல் வரும்.

ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி, மனை, வீடு, வண்டி வாகன யோகம் அமையும். தன தான்ய சேர்க்கைகள் அதிகரிக்கும். நல்ல உடல் ஆரோக்கியம் உயர் பதவிகள் கிடைக்கும். உடன் பிறந்த சகோதரர்களால் நன்மை ஏற்படும். செவ்வாய் பலமிழந்திருந்தால் உடல் நலத்தில் பாதிப்பு, எதிர்பாராத விபத்து ஏற்படும். சகோதர்களிடையே பகை ஏற்படும். தொழில் உத்தியோத்தில் விண் பிரச்சினை வரும்.

ராகுவினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபடலாம். ஒருமுறை காளஹஸ்தி சென்று காளத்திநாதரையும் அன்னை ஞானபிரசன்னாம்பிகையை தரிசனம் செய்து வரலாம். ராகு பரிகார தலங்கள் எத்தனையோ தமிழ்நாட்டில் இருந்தாலும் இங்கு ராகு கேதுவாக இறைவனும் இறைவியும் எழுந்தருளுவதால் மிகச்சிறந்த பரிகார தலமாக திகழ்கிறது. நவகிரகங்களில் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, தேங்காய், உளுந்து போன்றவற்றை தானம் செய்யலாம். புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று பால் ஊற்றி வணங்கலாம்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H