இந்த கொசு கடிக்கு நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தீர்வு காணலாம்.
தேவையான பொருட்கள் :
தேங்காய் எண்ணெய் 50 ml,
பூண்டு - ஐந்து பல்,
செய்முறை :
தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து சூடு பண்ணவும். அதனுடன் துண்டு துண்டாக நறுக்கிய பூண்டு பல்லை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
ஐந்து நிமிடம் கொதித்ததும் இறக்கி வைத்து, வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இந்த எண்ணையை நாம் இரவு தூங்கும் முன் கைகால் மற்றும் வெளியே தெரியும் பாகங்களில் தடவிக் கொண்டு படுத்துக் கொள்ளவும்.
இந்த பூண்டு, தேங்காய் எண்ணெய் நம் உடலுக்கு நன்மையை தறக்கூடியது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதை தினமும் செய்து வந்தால் ஒரு கொசு கூட உங்களை கடிக்காது. மேலும், தோல் நோய் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.









