40,000 கிளை போஸ்ட் மாஸ்டர் காலியிடங்கள்.... ப்ரோமோஷன் உண்டா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Sunday 5 February 2023

40,000 கிளை போஸ்ட் மாஸ்டர் காலியிடங்கள்.... ப்ரோமோஷன் உண்டா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

நாட்டின் கிளை அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் (Branch Post Master), துணை கிளை போஸ்ட் மாஸ்டர் (Assistant Branch Post Master), அஞ்சல் உதவியாளர் (Gramin Dak Sevaks (GDS) அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டது.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம், நாடு முழுவதும் 40,889 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிப்பதாரர்கள், 10ம் வகுப்பு, குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்த பதவிக்கு எந்தவித எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?

1 . தமிழ்நாட்டில் காலியிடங்கள் எண்ணிக்கை: தமிழ்நாட்டில் மட்டும் 3,167 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

2. இது, முழுக்க முழுக்க மத்திய அரசு வேலையா?

ஆம். இருந்தாலும், அஞ்சல்துறை துறை சாராத சேவை அமைப்பின் (Extra Departmental system in the Department of Posts) கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை, படிகள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும், அஞ்சல் துறையில் முழு நேர ஊழியர்களுக்கான சம்பள விகிதம் இவர்களுக்கு பொருந்தாது. (Gramin Dak Sevaks are holders of civil posts but they are outside the regular civil service)



3.அகவிலைப்படி உண்டா? ஆம் உண்டு! மத்திய அரசு ஊழியர்களுக்கு மாற்றி அமைக்கப்படும் போதெல்லாம் அவர்களுக்கும் மாற்றி அமைத்து வழங்கப்படும்

4.ப்ரோமோஷன் உண்டா?

ஆம்! குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட இந்த கிராம அஞ்சல் உதவியாளர்கள் துறைத் தேர்வின் மூலம் இந்திய அஞ்சல் துறையில் உள்ள நிர்வாகப் பிரிவின் கீழ் (Post of Administrative Offices (Circle Office and Regional Office) வரும் குரூப் 'சி' பணிக்கு (பல்நோக்கு பணியாளர் - Multi Tasking Staff) தகுதி பெறலாம்.

அதேபோன்று, 5 ஆண்டு பணி முன் அனுபவம் உடைய, கிராம அஞ்சல் உதவியாளர்கள் எந்தவித எழுத்துத் தேர்வும் இல்லாமல், இந்திய அஞ்சல் துறை சார்நிலைப் பணிகளில் (Posts of Subordinate Office) அடங்கிய குரூப் சி (பல்நோக்கு பணியாளர் - Multi Tasking Staff) நிலைக்கு தகுதியுடைவராவார். குறைந்தது 3 ஆண்டு பணி முன்அனுபவம் உள்ள அஞ்சல் உதவியாளர்கள் துறைத் தேர்வின் மூலம் கூட இந்த பதவியை அடையலாம்.

அதன்பின், போஸ்ட்மேன், மெயில்கார்டு உள்ளிட்ட பதவிகளுக்கு உயர்வு பெற வாய்ப்புண்டு.

5. பணியின் தன்மை என்ன? பகுதி நேர ஊழியர்களாக பயன்படுத்தப்படுவார்கள். அதாவது நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 மணி நேரம் மட்டுமே வேலை இருக்கும்.

6. ஓய்வு பெறும் வயது என்ன? இந்தப் பணியாளர்கள் 65-ஆவது வயது வரை பணியில் இருப்பார்கள்.

7. படித்த இளைஞர்கள் அப்ளை செய்யலாமா? இன்றைய இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்புகளில் நாட்டம் செலுத்தி வருகின்றன. பொதுவாக, வட இந்தியாவில் யுபிஎஸ்சி,எஸ்எஸ்சி தேர்வுகளுக்கு தாயராகி வரும் தேர்வர்கள், இந்த கிராம உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வது வழக்கம். வேலை நேரங்கள் போக இதர நேரத்தில் தேர்வுக்கு தயார் படுத்திக்கொள்கின்றனர். எனவே, நீங்கள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் வருமானம் ஈட்டி வரும் நபராக இருந்தால் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இல்லையேல், ஏதேனும் தனியார் நிறுவனத்தில் பணி செய்து கொண்டு, எஸ்எஸ்சி தேர்வெழுதி நல்ல பதவியில் அமரலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H