மத்திய தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இங்கு காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் மாத சம்பளம் ரூ.47 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பெறும் வகையில் பணியில் அமர சூப்பரான வாய்ப்பு உருவாகி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ் நிரப்பி வருவது போல் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு ஆட்சேர்ப்பு பணியை யுபிஎஸ்சி (UPSC)எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்த தேர்வாணையம் சார்பில் மத்திய தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (Employees Provident Fund Organisation or EPFO) காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
காலியிடங்கள் எவ்வளவு?இபிஎப்ஓவில் தற்போது அசிஸ்டென்ட் ப்ராவிடென்ட் பண்ட் கமிஷனர் (Assistant Providnet Fund Commissioner) மற்றும் என்போர்ஸ்மென்ட் ஆபிசர்/அக்கவுண்ட் ஆபிசர் (Enforcement Officer/Accounts Officer) என 2 பிரிவுகளில் மொத்தம் 577 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் என்போர்ஸ்மென்ட் ஆபிசர்/அக்கவுண்ட் ஆபிசர் பணிக்கு 418 பேரும், அசிஸ்டென்ட் ப்ராவிடென்ட் பண்ட் கமிஷனர் பணிக்கு 159 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித்தகுதி - மாத சம்பளம் என்ன?
அசிஸ்டென்ட் ப்ராவிடென்ட் பண்ட் கமிஷனர், என்போர்ஸ்மென்ட் ஆபிசர்/அக்கவுண்ட் ஆபிசர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை முடித்திருக்க வேண்டும். என்போர்ஸ்மென்ட் ஆபிசர்/அக்கவுண்ட் ஆபிசர் மாதம் ரூ.47,600 முதல் ரூ.81,460 வரை சம்பளம் வழங்கப்படும். அசிஸ்டென்ட் ப்ராவிடென்ட் பண்ட் கமிஷனர் பணிக்கு ரூ.51,600 முதல் ரூ.1.02 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு என்ன?
என்போர்ஸ்மென்ட் ஆபிசர்/அக்கவுண்ட் ஆபிசர் பணிக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அசிஸ்டென்ட் ப்ராவிடென்ட் பண்ட் கமிஷனர் பணிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஒபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும் விலக்கு அளிக்கப்பட உள்ளது. மேலும் அரசு விதிகளின் படி பிற பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்ப கட்டணம் எதுவும் கிடையாது. விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.upsconline.nic.in இணையதளம் மூலம் மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here