இங்கிலாந்தில் செல்போனை அதிக நேரம் பயன்படுத்திய இளம்பெண் ஃபெனெல்லாவுக்கு 'வெர்டிகோ' என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் படுத்த படுக்கையாக கிடக்கிறார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த ஃபெனெல்லா (29) என்ற பெண் ஒவ்வொரு
நாளும் செல்போன் அதிக நேரம் பார்த்துக் கொண்டு இருப்பார். செல்போனில் ஒரு
நாளைக்கு 14 மணி நேரத்திற்கும் மேலாக செலவிட்ட அவர், தற்போது 'வெர்டிகோ'
என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு நவம்பரில் இந்த நோய்
பாதிப்பு ஏற்பட்டது. தலை மற்றும் கழுத்து வலியால் பாதிக்கப்பட்ட அவர்,
தற்போது நிற்க முடியாமல் தவித்து வந்தார். அதனால் வேறுவழியின்றி படுத்த
படுக்கையாக இருந்து வருகிறார்.
இந்த சூழ்நிலைக்கு அவர் போனதற்கு
காரணம், அவர் தனது படுக்கையில் அதிக நேரம் செல்போனை பார்த்துக்
கொண்டிருந்தது தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து
மருத்துவர்கள் கூறுகையில், 'ஃபெனெல்லாவின் தந்தை ஒருநாள் தனது மகளை
மருத்துவனைக்கு அழைத்து வந்தார். அவரை பரிசோதித்து பார்த்ததில், அவருக்கு
சைபர்மோவ் அல்லது டிஜிட்டல் வெர்டிகோ நோய் பாதிப்பு இருப்பது
காணப்பட்டுள்ளது. அதிகப்படியான நேரம் செல்போனை பயன்படுத்தியதால், அவரது
நரம்புகள் பாதிக்கப்பட்டு ரத்தம் மற்றும் ஆக்சிஜனின் ஓட்டத்தை குறைத்து
பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது' என்றனர்.