இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டுவரும் கொல்கத்தாவில் மெட்ரோ ரயில்வே கழகத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடமிருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 01/23/Metro Raiway/Kolkata
பயிற்சியின் பெயர்: தொழில்பழகுநர் பயிற்சி (Trade Apprentice)
மொத்த காலியிடங்கள்:
125
பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 81
2. Electrician - 2
3. Machinist - 9
4. Welder - 9
வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை குறுக்கு கோடிட்ட ஐபிஓ-ஆக செலுத்த வேண்டும்.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர்கள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.mtp.indianrailways.gov.in
என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இனைத்து மார்ச் 6 ஆம் தேதிக்கு முன் தபாலில் விண்ணப்பிக்கவும்.









