இன்றைய காலகட்டங்களில் நீரிழிவு நோயானது மனிதர்களை பெரும்பாலாக தாக்கும் நோய்களில் ஒன்றாக இருக்கிறது.
முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் அவசரமான வாழ்க்கை முறை காரணமாக நமக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் இது மரபு வழி நோயாகவோ அல்லது நமது நமது உணவு பழக்க வழக்கங்களால் ஏற்படக்கூடிய ஒன்றாகயிருக்கிறது. மருந்து மாத்திரைகளோடு சேர்த்து நம் வீட்டில் இருக்கக்கூடிய உணவு பொருட்களைக் கொண்டு நம் நீரிழிவு நோயினை கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதற்கு என்னென்ன உணவுப் பொருட்களை பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
நாம் உணவில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் கிராம்பு, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்குரிய ஒரு சிறந்த உணவு பொருளாகும். நாம் உணவு சாப்பிட்ட பிறகு இரண்டு கிராம்பு எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிடுவதன் மூலம் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இது உடலின் இன்சுலின் சுரப்பை தூண்டி சர்க்கரை கட்டுக்குள் இருக்க உதவுகிறது.
இலவங்கப்பட்டை ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடிய மற்றும் ஒரு சிறந்த பொருளாகும். இது இன்சுலின் உற்பத்தியினை தூண்டுவதற்குரிய சிறந்த மூலமாக பயன்படுகிறது. நாம் உணவருந்திய பின்னர் இலவங்கப்பட்டையில் தேயிலை தயாரித்து சாப்பிடுவதன் மூலம் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.
மிளகில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இவை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சாப்பாட்டிற்கு முன் இரண்டு அல்லது மூன்று மிளகினை மென்று சாப்பிடுவது நம் உடலின் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
நார்ச்சத்துக்களை அதிகமாக கொண்டுள்ள வெந்தய விதைகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வைக்கின்றன. இவை கார்போஹைட்ரேட்டுகளை அதிக அளவில் உறிஞ்சி ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகாமல் தடுக்கிறது. இதனால் வெந்தய விதைகளை ஊறவைத்து குடிப்பதன் மூலம் சர்க்கரை நோயிலிருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
மஞ்சள் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. அதிலும் மஞ்சளில் இருக்கக்கூடிய குர்குமின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வைக்கிறது. இதனால் நம் உணவில் மஞ்சள் சிறிதளவு சேர்த்து ரத்தத்தில் சர்க்கரை உயராமல் பார்த்துக் கொள்ளலாம்.