பாடாய் படுத்தும் கழுத்துவலியில் இருந்து விடுபட சில 'எளிய' பயிற்சிகள்! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Sunday 19 March 2023

பாடாய் படுத்தும் கழுத்துவலியில் இருந்து விடுபட சில 'எளிய' பயிற்சிகள்!

ன்றைய வாழ்க்கை முறை மற்றும் நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்து வேலை செய்வதன் காரணமாக, கழுத்து வலி என்பது ஆண்கள் மற்றும் பெண்களிடத்தில் நடுத்தர வயதில் காணப்படும் ஒரு பொதுவான நிலைமையாக உள்ளது.

கழுத்து வலிக்கு முக்கிய காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்துபோவதால் கழுத்தை தசையால் தாங்கிப்பிடிக்க முடியாமல், கழுத்து வலி ஏற்படுகிறது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், கழுத்துவலி பிரச்சனை ஏற்படுகிறது. அதே போன்று நீண்ட நேரம் தலையை சாய்த்து, மொபைல் விளையாடும் நபர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து கணிணியில் வேலை செய்யும் நபர்கள் இந்த பிரச்சனைக்கு பலியாகிறார்.

கழுத்து வலியை அலட்சியப்படுத்தி கவனிக்காமல் விட்டு விட்டால், நரம்பியல் ரீதியிலான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதிலிருந்து விடுபட, தசையை வலிமையாக்கக்கூடிய பயிற்சிகள் மிகவும் பலன் தரும். கழுத்து வலியுடன் தொடர்புடைய சில பொதுவான அறிகுறிகள், கழுத்துத் தசைகளில் விறைப்புத் தன்மை, கழுத்தின் அசைவுகள் தடைபடுதல், கழுத்துப் பகுதியில் வலி, கைகள் மற்றும் தோள்களில் வலி, ஒற்றை தலைவலி ஆகியவை ஆகும். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட பலர் வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதற்கான சில வீட்டு வைத்தியங்கள் மற்றும் பயிற்சியின் உதவியுடன் வலியை பெருமளவில் கட்டுப்படுத்தலாம்.

தோள்களுக்கான பயிற்சிகள்

நமது மூளையின் நரம்புகள் தோள்கள் வழியாக உடல் முழுவதும் பரவுகின்றன. கழுத்துவலி ஏற்படும் போதெல்லாம், நேராக நின்று கொன்று, உங்கள் தோள்களின் மேல் பகுதியை வட்ட இயக்கத்தில் சுழற்றவும். இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு 3 முறை செய்யவும்.

கழுத்து பயிற்சி

கடினமான கழுத்தை எளிதாக்குவதற்கான எளிய வழி, முடிந்தவரை மெதுவாக மேலும் கீழும் பார்ப்பது போல் பயிற்சி செய்வது. அதோடு, முதுகை வளைக்காமல் நேராக நின்று கொண்டு, கழுத்தை ஒரு முறை இடது பக்கமாகவும், பின்னர் வலது பக்கமாகவும் மாறி மாறி கழுத்தை அசைக்க வேண்டும். இதை 5-8 முறை செய்வது சிறந்த பலனைத் தரும்.

நாற்காலியில் உட்கார்ந்த நிலையில் பயிற்சி

இந்தப் பயிற்சியைச் செய்ய, நாற்காலியில் நேராக உட்கார்ந்து, உங்கள் கைகளை இரு முழங்கால்களிலும் வைத்து வலது மற்றும் இடது பக்கம் அசைக்கவும். இதனால், நரம்புகளுக்கு பயிற்சி கிடைத்து, வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

கழுத்து பயிற்சி

இந்த பயிற்சியை செய்வதற்கு இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்து மெதுவாக கும்பிட வேண்டும். முதலில் வலது பக்கம் சாய்ந்து பின் இடது பக்கம் சாய்க்கவும். இந்த பயிற்சியை சுமார் 10-12 முறை செய்யவும். இந்த பயிற்சியை தினமும் காலையில் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், கழுத்து வலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும், கழுத்துவலி உள்ளவர்களுக்கு இது ஒரு சஞ்சீவி பயிற்சி.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H