மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் | 2023 - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் | 2023

மேஷம் - அஸ்வினி: இந்த ஆண்டு நல்ல பலன்களைப் பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும்.

மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.

பரணி:இந்த ஆண்டு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.

கார்த்திகை 1ஆம் பாதம்: இந்த ஆண்டு பிரச்சினைகள் மற்றும் விவகாரங்கள் தீர ஆலோசனை செய்து முடிவெடுப்பீர்கள். நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்க்கிழமைதோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும் | முழுமையான மாத பலன்களுக்கு > சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - மேஷம் ராசியினருக்கு எப்படி?

ரிஷபம் - கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள்.

ரோகிணி: இந்த ஆண்டு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.

மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள்: இந்த ஆண்டு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும் | முழுமையான மாத பலன்களுக்கு > சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - ரிஷபம் ராசியினருக்கு எப்படி?

மிதுனம் - மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். உங்கள் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்பு நீங்கும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து உங்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்.

திருவாதிரை: இந்த ஆண்டு அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்துக் கொள்வீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுபசெலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். வாக்கு வன்மையால் தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த ஆண்டு உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். தொகுதியில் மதிப்பு கூடும். கோஷ்டி பூசலையும் தாண்டி சாதிப்பீர்கள்.

பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும் | முழுமையான மாத பலன்களுக்கு > சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - மிதுனம் ராசியினருக்கு எப்படி?

கடகம் - புனர்பூசம் 4ம் பாதம்:இந்த ஆண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும்.

பூசம்:இந்த ஆண்டு பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.

ஆயில்யம்: இந்த ஆண்டு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். அரசியல்வாதிகள் சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கட்சித் தலைமையின் ஆதரவு கிட்டும். கட்சி மேல்மட்டத்தால் அலைக்கழிக்கப்படுவீகள். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும்.

பரிகாரம்: திங்கள்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று 16 முறை வலம் வரவும் | முழுமையான மாத பலன்களுக்கு > சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - கடகம் ராசியினருக்கு எப்படி?

சிம்மம் - மகம்: இந்த ஆண்டு தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேலதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

பூரம்: இந்த ஆண்டு பணவரத்து திருப்தி தரும். நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்பு தேடிவரும். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம். மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. பாடங்கள் எளிமையாக தோன்றும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த ஆண்டு துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நியாயமாகவும், நேர்மையாகவும அதனை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோதைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுகிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும் | முழுமையான மாத பலன்களுக்கு > சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - சிம்மம் ராசியினருக்கு எப்படி?

கன்னி - உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. எதிர்க்கட்சியினரின் உதவி கிடைக்கும்.

அஸ்தம்: இந்த ஆண்டு புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவீர்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் மதிப்பை உணருவர். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். காரியத் தடை ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். ஆனாலும் மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த ஆண்டு தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும்.

பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தான் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும் | முழுமையான மாத பலன்களுக்கு > சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - கன்னி ராசியினருக்கு எப்படி?

துலாம் - சித்திரை 3, 4 பாதங்கள்:இந்த ஆண்டு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகள் தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது அவசியம். கட்சித் தலைமையின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். படைப்புகளை வெளியிட சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.

சுவாதி: இந்த ஆண்டு எந்த நேரத்திலும் தகுதி குறையாமல் செயல்படுவீர்கள். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த ஆண்டு சிறந்த பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் குல தெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள் | முழுமையான மாத பலன்களுக்கு > சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - துலாம் ராசியினருக்கு எப்படி?

விருச்சிகம் - விசாகம் 4ம் பாதம்:இந்த ஆண்டு எத்தனை தடை வந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்க மாட்டீர்கள். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

அனுஷம்: இந்த ஆண்டு தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணிநிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

கேட்டை:இந்த ஆண்டு எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவீர்கள். சகாக்கள் மத்தியில் ஆதரவு பெருகும். வீண், வறட்டு கௌரவத்துக்காக சேமிப்புகளை கரைத்துக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினரின் படைப்புத்திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். உங்கள் முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் காலையில் அம்பாள் கோவிலுக்குச் சென்று 3 முறை வலம் வரவும் | முழுமையான மாத பலன்களுக்கு > சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - விருச்சிகம் ராசியினருக்கு எப்படி?

தனுசு - மூலம்:இந்த ஆண்டு எந்த காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கும். நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது. வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரியத் தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும்.

பூராடம்:இந்த ஆண்டு பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த ஆண்டு வீண் அலைச்சல் உண்டாகலாம். மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.

பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும் | முழுமையான மாத பலன்களுக்கு > சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - தனுசு ராசியினருக்கு எப்படி?

மகரம் - உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு குடும்பத்தில் அக்கறை காட்டுவீர்கள். நீங்கள் கவலை, பயம் இல்லாமல் செயல்படக்கூடியவர். எல்லா விஷயத்திற்கும் மனசாட்சியை நம்புபவர். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். இதுவரை இருந்து வந்த மனக்கவலை நீங்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை.

திருவோணம்:இந்த ஆண்டு தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சகஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அவிட்டம் 1,2 பாதங்கள்:இந்த ஆண்டு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம், கவனம் தேவை. எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல் திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல்எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும் | முழுமையான மாத பலன்களுக்கு > சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - மகரம் ராசியினருக்கு எப்படி?

கும்பம் - அவிட்டம் 3, 4 பாதங்கள்:இந்த ஆண்டு பயணங்களால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல்திறன் கூடும். மாணவர்கள் பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.

சதயம்: இந்த ஆண்டு எதையும் திட்டவட்டமாக பேசி காரியங்களில் குழப்பம் இல்லாமல் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று காலதாமதம் ஆகலாம். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனை தரும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த ஆண்டு உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கை துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். எடுத்தகாரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும் | முழுமையான மாத பலன்களுக்கு > சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - கும்பம் ராசியினருக்கு எப்படி?

மீனம் - பூரட்டாதி 4ம் பாதம்: இந்த ஆண்டு எப்போதும் ஒரே கருத்தை கொள்ளாமல் அவ்வப்போது எண்ணங்களும் கருத்துக்களும் மாறிக்கொண்டே இருக்கும். நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறுவார்கள்.

உத்திரட்டாதி: இந்த ஆண்டு பிரச்சினைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

ரேவதி: இந்த ஆண்டு சுறுசுறுப்பாகவும் அடுத்தவரை அடக்கி ஆளும் திறமையும் வெளிப்படும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடித போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும் | முழுமையான மாத பலன்களுக்கு > சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - மீனம் ராசியினருக்கு எப்படி?

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H