SBI வங்கியில் அக்கவுண்ட் இருக்கா? இந்த விவரத்தை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


SBI வங்கியில் அக்கவுண்ட் இருக்கா? இந்த விவரத்தை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) இலவச மிஸ்டு கால் மற்றும் SMS வங்கி சேவையை வழங்குகிறது. பயனர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் பேங்க் பேலன்ஸ், மினி ஸ்டேட்மெண்ட் மற்றும் இன்னும் பல விவரங்களை சரிபார்க்கலாம்.
SBI Quick Missed Call Banking Service எனப்படும் அம்சத்தின் கீழ், ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு வாடிக்கையாளர்கள் மிஸ்டு கால் அல்லது SMS அனுப்புவதன் மூலம் வங்கிச் சேவைகளை பெறலாம். வங்கி கணக்கில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மட்டுமே, இந்த சேவையை பெற முடியும்.

எஸ்பிஐ குயிக் என்பது எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, ஆன்லைன் அப்ளிகேஷன், இருப்புத் தொகை விவரம், மினி ஸ்டேட்மெண்ட், ஏடிஎம் கார்டு பிளாக்கிங், கார் லோன் அம்சங்கள் மற்றும் PM சமூக பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட பல வசதிகளை வழங்கும்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், மிஸ்டு கால் அல்லது SMS அனுப்ப வேண்டும். மேலும், இந்த சேவை மூலம் வீட்டுக் கடன் மற்றும் கல்விக் கடனுக்கான வட்டிச் சான்றிதழையும் பெறலாம். மற்ற அம்சங்களில் ஏடிஎம் கார்டு ஆன்/ஆஃப், க்ரீன் பின் உருவாக்குதல் மற்றும் யோனோ டவுன்லோட் வசதி ஆகியவை அடங்கும்.

எஸ்பிஐ குயிக் மிஸ்டு கால் வங்கி சேவையைப் பயன்படுத்த உங்களை நீங்கள் பதிவு செய்ய வேண்டும். உங்களை எப்படி பதிவு செய்வது என பார்க்கலாம்.

முதலில், வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 09223488888 என்ற எண்ணுக்கு 'REG account number' என டைப் செய்து SMS அனுப்பவும். எடுத்துக்காட்டாக, உங்கள் கணக்கு எண் 12345678901 எனில், நீங்கள் 'REG 12345678901' என்ற செய்தியை அனுப்புவீர்கள்.

இருப்பு தொகையை சரிபார்ப்பது எப்படி : உங்கள் வங்கி இருப்பைச் சரிபார்க்க மேலே கொடுக்கபட்டுள்ள எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள் அல்லது 09223766666 என்ற எண்ணிற்கு "BAL" என்ற உரையுடன் SMS அனுப்பவும்.


மினி ஸ்டேட்மெண்ட் : மினி ஸ்டேட்மெண்ட் பெற, 9223866666 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் அல்லது "MSTMT" என்ற உரையுடன் SMS அனுப்பவும்.

ஏடிஎம் கார்டைத் பிளாக் செய்ய : உங்கள் ஏடிஎம் கார்டைத் பிளாக் செய்ய வேண்டும் என்றால், 567676 என்ற எண்ணிற்கு "BlockXXXX" என்ற உரையுடன் எஸ்எம்எஸ் அனுப்பலாம். இதில், XXXX என்பது உங்கள் கார்டு எண்ணின் கடைசி 4 இலக்கங்களைக் குறிக்கிறது.

கார் அல்லது வீட்டுக் கடன் : கார் அல்லது வீட்டுக் கடன் பற்றி விசாரிக்க, "Car" அல்லது "Home" என்ற உரையுடன் 567676 அல்லது 09223588888 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

சேவைகளின் முழு பட்டியல் : SBI எஸ்பிஐ குயிக் மிஸ்டு கால் வங்கி சேவை மூலம் கிடைக்கும் சேவைகளின் முழுமையான பட்டியலைப் பார்க்க, "HOME" என்ற உரையுடன் 09223588888 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும். இந்தச் சேவைகளைப் பயன்படுத்தும் போது உங்கள் கணக்கில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தவும்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H