எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடன்களின் உச்சபட்ச வட்டி விகிதத்தை 8.45% இருந்து 8.70% ஆக உயர்த்தியுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும். இதனால் புதிய கடன் பெறுபவர்களின் இஎம்ஐ அதிகரிக்கும்.
வீட்டுக் கடன்களுக்கான உச்சபட்ச வட்டி விகிதத்தை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தியுள்ளதால், புதிதாக கடன் பெறுபவர்களின் இஎம்ஐ அதிகரிக்க வாய்ப்புள்ளது.
குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.50 சதவீதமாக தொடர்ந்தாலும், உச்சபட்ச வட்டி விகிதம் 8.45 சதவீதத்தில் இருந்து 8.70 சதவீதமாக எஸ்பிஐ வங்கி உயர்த்தியுள்ளது.
ந்த புதிய வட்டி விகிதம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
இதனால் சிபில் ஸ்கோர் குறைவாக உள்ள வாடிக்கையாளர்கள் கடன் பெறும்போது, அவர்களுக்கான இஎம்ஐ அதிகரிப்பதால் திரும்ப செலுத்தும் தொகையும் கணிசமாக உயரும் சூழல் உருவாகியுள்ளது.
உதாரணமாக, 20 ஆண்டுகளுக்கு 30 லட்சம் ரூபாய் கடனாக பெற்றவர் 8.45 சதவீத வட்டி விகிதத்தின்படி, மாதம் 25 ஆயிரத்து 830 ரூபாய் EMI செலுத்த வேண்டியிருந்தது. இதனால், அவர் மொத்தமாக 61 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயை வட்டியோடு திரும்ப செலுத்தி இருப்பார்.
னால், தற்போது அதே அளவிலான கடனை 8.70 சதவீத வட்டி விகிதத்தில் பெறும்போது மாதம் 26 ஆயிரத்து 278 ரூபாய் இஎம்ஐ செலுத்த வேண்டிவரும்.
இதன் மூலம் மொத்தமாக 63 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.