டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது என்று வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் தங்களுடைய பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள் என்று அரசு அறிவித்துள்ளது. இவற்றை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது. அதற்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படும். இந்த இணைப்பைச் செய்யத் தவறினால் வங்கிப் பரிவர்த்தனைகள், கிரெடிட் கார்டுகள், முதலீடுகள் மற்றும் வருமான வரி ரீஃபண்டுகள் பாதிக்கப்படும். ஏன் இந்த காலக்கெடு முக்கியம். வரி செலுத்துவோருக்கு ஒரு இறுதி நினைவூட்டலை வருமான வரித் துறை அனுப்பியுள்ளது. டிசம்பர் 31க்குள் தங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
(The last date to link PAN card with #Aadhaar is December 31, 2025. If you fail to link the two by the above date, your #PAN card will become inoperative.)
உங்கள் பான் கார்டுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கீழ்கண்ட இணையதள முகவரிக்கு செல்லவும்
Click Here to Download - Aadhaar Card - PAN Card - Direct Checking Link Status









