யுஜிசி நெட் டிசம்பர் 2025 அட்மிட் கார்டு பதிவிறக்கம்?
படி 1 : https://ugcnet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்ய முடியும்.படி 2 : முகப்பு பக்கத்தில் Admit Card என Latest News பகுதியில் இடம்பெற்று இருக்கும். அதனை கிளிக் செய்யவும்.
படி 3 : அதில் விண்ணப்ப எண், பாஸ்வோர்டு மற்றும் பாதுகாப்பு எண் ஆகியவற்றை உள்ளிட்டு லாங்கின் செய்யவும்.
படி 4 : தொடர்ந்து, உங்களில் அட்மிட் கார்டு திறையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
படி 5 : மேலும், அட்மிட் கார்டில் இடம்பெற்றுள்ள விவரங்களை சரிபார்த்துக்கொள்ளவும்.
அட்மிட் கார்டில் என்னென்ன இடம்பெறும்?
அட்மிட் கார்டில் தேர்வர்களின் விவரங்களுடன், பதிவு எண், தேர்வின் பாடம், நாள், நேரம் மற்றும் இடம் இடம்பெற்று இருக்கும். அட்மிட் கார்டில் உள்ளப்படி தேர்வர்கள் நேரத்தை முறையான கடைபிடிக்க வேண்டும். தேர்விற்கு செல்லும் நபர்கள், கட்டாயம் அசல் அடையாள அட்டை எடுத்துசெல்ல வேண்டும். ஆதார் இருப்பவர்கள், அசல் ஆதார் அட்டையை கொண்டு செல்லவும். ஆதார் இல்லாதவர்கள் முன்னரே சென்று, அதற்கான உரிய ஆவணத்தை சமர்பிக்க வேண்டும். கூடுதலாக தேர்வர்கள் விண்ணப்பத்தில் அளித்த 2 புகைப்படங்களை எடுத்துசெல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தால் கொண்டு செல்ல வேண்டும்.








