- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 18 July 2013

இந்த ஆண்டு( 2013-14)தரம் உயர்ந்த மேல்நிலைப்பள்ளிகளில் 1,000 ஆசிரியர் பணியிடம் கவுன்சலிங் மூலம் நியமனம்:

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 100 தலைமைஆசிரியர்கள், 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை கவுன்சலிங் மூலம் நிரப்பப்படவுள்ளனர்.2013-14ம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதையடுத்து தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணயிடங்கள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தப்பட்டது. 9 பாடப்பிரிவுகளுக்கு தலா ஓர் ஆசிரியர் வீதம் தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளுக்கு 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களை கவுன்சலிங் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ள னர். இதற்கான கவுன்சலிங் இன்று நடக்கிறது.

பிற்பகல்  தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சலிங் நடக்கிறது. தொடர்ந்து ஜூலை 20ம் தேதி முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு (மாவட்டத்திற்குள் மாறுதல்) கவுன்சலிங்கும், 22ம் தேதி முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு (மாவட்டம் விட்டு மாவட் டம்) கவுன்சலிங்கும் நடக்க உள்ளது. கவுன்சலிங் அனைத்தும் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடக்க உள்ளன.வழிகாட்டுதல் நெறிமுறைகள்: மாறுதல் கோரும் முதுநிலை ஆசிரியர்கள் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர் வழியாக ஜூலை 19ம் தேதி மாலை 5 மணி வரை அளிக்கலாம். 2013-14ம் கல்வியாண்டிற்கு மே மாதம் நடந்த கவுன்சலிங் கில் மாறுதல் ஆணை பெற்றவர்கள் இந்த கவுன்சலிங்கில் பங்கேற்க முடியாது. மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களை மட்டுமே நியமிக்கலாம். இருபாலர் பள்ளிகளில் இருபாலர் ஆசிரியர்களையும் நியமிக்கலாம்.இவ்வாறு வழிகாட்டுதல் நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H