உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Monday 28 July 2014

உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு:

பல அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணியாற்றி வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு பணியாற்றும் ஆசிரியர்கள் பற்றிகணக்கெடுக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது இலவச கல்வி: புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் 462 செயல்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 284 அரசு பள்ளிகளில், நகரப்பகுதியில் 140 பள்ளிகளும், கிராமப்புறத்தில் 127பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
தற்போது, அரசு பள்ளிகளுக்கு இணையாக, தனியார் பள்ளிகளும் அதிகரித்து வருகின்றன. ஆங்கில மோகம், கல்வித்தரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட காரணங்களால், பெரும்பாலான மக்கள் தனியார் கல்வி நிறுவனங்களையே நாடி வருகின்றனர்.
சேர்க்கையில் சரிவு: ஆண்டுதோறும் கிராமப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கணிசமாக குறைந்து வருகிறது. அதேசமயம், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, நகரப் பகுதியில் உள்ள பள்ளிகளில் பணியாற்றவே பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புகின்றனர். மாணவர்களின் கிரகிப்பு திறன், நீண்ட துார பயணம், போக்குவரத்து வசதியின்மை போன்ற காரணங்களால் கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றுவதை தவிர்க்க விரும்புகின்றனர்.

பற்றாக்குறை: சில ஆசிரியர்கள் ஆளுங்கட்சி பிரமுகர்களின் சிபாரிசின் பேரில், நகர்புற பள்ளிகளிலேயே பல ஆண்டு காலம் பணியாற்றும் நிலை உள்ளது. இது ஒரு புறமிருக்க, சீனியர் ஆசிரியர்கள் பலர், கல்வித் துறை அதிகாரிகளின் கைங்கரியத்தால் நகர் பகுதியிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

போராட்டம்: இதன்காரணமாக கிருமாம்பாக்கம், நெட்டப்பாக்கம், தவளக்குப்பம், மதகடிப்பட்டு உட்பட பல இடங்களில் உள்ள கிராமப்புற அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

சுற்றறிக்கை: எனவே, பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை, பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு மாற்ற, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, கடந்த வாரம் அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கணக்கெடுப்பு: ஒவ்வொரு பள்ளியிலும் உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கெடுத்து, அறிக்கை தருமாறு தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், காலி பணியிடங்களுக்கு உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

வசதிகள் இருந்தும்...

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடபுத்தகம், சீருடை, காலணி, சிற்றுண்டி, சைக்கிள், பாக்கெட் மணி உள்ளிட்ட பல இலவசங்களை அரசு வாரி வழங்கி வருகிறது. அத்துடன், தேவையான கட்டட வசதி, விளையாட்டு மைதானம் போன்ற வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது. எனினும், ஆரம்பக் கல்வியைத் பொறுத்தவரை, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, படிப்படியாக குறைந்து வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H