10-ம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களை பள்ளி அளவில் தயாரிக்க அரசு தேர்வுத்துறை உத்தரவு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 30 July 2015

10-ம் வகுப்பு மாணவர்களின் முழு விவரங்களை பள்ளி அளவில் தயாரிக்க அரசு தேர்வுத்துறை உத்தரவு:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிகழாண்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிற மாணவ, மாணவிகளின் முழு விவரங்களையும் பள்ளி அளவில் தயார் செய்து அனுப்பி வைக்குமாறு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குநர்(பொறுப்பு) வசுந்தராதேவி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:நிகழாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத இருக்கிற மாணவ, மாணவிகள் பற்றிய முழுவிவரங்கள்  தயாரிக்கும் பணி அந்தந்த பள்ளிகளில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்கு முன்பு வரையில் மாணவ, மாணவிகளின் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்கள் மட்டும் தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. அதிலும், தகப்பனாரின் முதல் எழுத்து மற்றும் பிறந்த தேதி ஆகியவை தவறாக குறிப்பிடவும் நேர்ந்தது.

எனவே இதுபோன்ற தவறுகளை தவிர்க்கும் வகையில், தற்போது கூடுதல் விவரங்களுடன் தயார் செய்யப்பட இருக்கிறது. இத்தேர்வு எழுத இருக்கிற மாணவ, மாணவிகளின் முழுவிவரங்களையும் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் தயார் செய்யப்பட இருக்கிறது. இதில், 10ம் வகுப்பு படித்து வருகிறவர்களின் பெயர், பெற்றோர் மற்றும் பாதுகாவலர் விவரம், மதம், இனம், பிறந்த தேதி, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் விவரம், ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் உள்ளிட்ட முழு விவரங்களையும் விண்ணப்பத்தில் கட்டாயம் குறிப்பிட வேண்டும. ஆதார் எண் இல்லாதவர்கள் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. இப்பணியை இம்மாதம் 30ம் தேதி தொடங்கி, ஆக.30-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
வகுப்பறையில் ஆசிரியர்கள் பூர்த்தி செய்ததை, தலைமை ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். அதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் ஆகியோரை பள்ளிக்கு வரவழைத்து விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து கையொப்பமிட வேண்டும். இதில், 2016ல் தேர்வு எழுத இருக்கிற மாணவ, மாணவிகள் கட்டாயம் 14 வயதை பூர்த்தி அடைந்தவராக வேண்டும். இதை குறிப்பிட்ட நாள்களுக்குள் தயார் செய்து அதன் விவரங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம், தேர்வு துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H