பணி நியமன ஆணை வழங்கக் கோரி சிறப்பு பாடங்களுக்காக தேர்வானவர்கள் போராட்டம் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

POST HOME AD

Post Top Ad

Monday, 17 June 2019

பணி நியமன ஆணை வழங்கக் கோரி சிறப்பு பாடங்களுக்காக தேர்வானவர்கள் போராட்டம் :

பணி நியமன ஆணை வழங்கக் கோரி சிறப்பு பாடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்ய கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு ஆயிரத்து 80 பேர் கொண்ட தகுதிப் பட்டியலும் வெளியிடப்பட்டது.
இதனிடையே தகுதியிருந்தும் தங்களது பெயர்கள் தகுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை எனக் கூறி, தமிழ்வழியில் தேர்வெழுதியவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தகுதிப்பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கும் இதுவரை பணிநியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.
இதனைக் கண்டித்தும், உடனடியாக தங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்க வேண்டும் எனவும் கோரி, தேர்வில் வெற்றி பெற்று தகுதிப்பட்டியலில் இடம்பெற்றவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad