முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு!
நீங்கள் PhD முடித்தோ அல்லது கல்லூரிப் பேராசிரியர், விரிவுரையாளர் போன்ற ஆசிரியப் பணிகளுக்கான தேர்வுகளை எழுதி தகுதியுடன் இருந்தாலோ கவனியுங்கள்!
இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரி ஆசிரியப் பணிகளையும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிரப்புமாறு UGC கட்டளையிட்டுள்ளது.
48 மத்தியப் பல்கலைகளில் மட்டும் 5000 இடங்கள் காலியாக உள்ளன. இவை போக 40,000 கல்லூரிகள், 900 மாநிலப் பல்கலைகள், நிகர்நிலைப் பல்கலைகள் அனைத்திலும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன.
அடுத்த சில வாரங்களில் அனைத்து நிறுவனங்களில் இருந்தும் இத்தகைய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் குவிவதைக் காண்பீர்கள். நீங்கள் PhD முடித்தோ அல்லது கல்லூரிப் பேராசிரியர், விரிவுரையாளர் போன்ற ஆசிரியப் பணிகளுக்கான தேர்வுகளை எழுதி தகுதியுடன் இருந்தாலோ கவனியுங்கள்!
இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரி ஆசிரியப் பணிகளையும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிரப்புமாறு UGC கட்டளையிட்டுள்ளது.
48 மத்தியப் பல்கலைகளில் மட்டும் 5000 இடங்கள் காலியாக உள்ளன. இவை போக 40,000 கல்லூரிகள், 900 மாநிலப் பல்கலைகள், நிகர்நிலைப் பல்கலைகள் அனைத்திலும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன.
இப்போது இவற்றை ஒட்டு மொத்தமாக நிரப்பினால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு உங்களுக்கு ஆய்வு, கல்லூரிக் கற்பித்தல் பணி வாய்ப்புகள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விடும்.
நீங்கள் தமிழ்நாட்டில் BC/MBCயின் கீழ் வந்தால் (அதாவது கவுண்டர், வன்னியர், கள்ளர்/மறவர்/அகமுடையர் என்னும் முக்குலத்தோர், நாடார், மீனவர்கள், கோனார், நாவிதர், வண்ணார் போன்ற நூற்றுக் கணக்கான சாதிகள்), மத்தியப் பணிகளுக்கு விண்ணிப்பிக்கும் போது OBCயின் கீழ் வருவீர்கள்.
இதற்கு விண்ணப்பிக்க OBC - Non creamy layer சான்று பெற வேண்டும். இதை உங்கள் உள்ளூர் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். 27% OBC இட ஒதுக்கீட்டை விட்டால் பொதுப்போட்டியில் காட்டப்படும் பல்வேறு பாரபட்சங்கள் காரணமாக உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். எனவே, தவறாமல் OBC - Non Creamy layer சான்று பெற்று விண்ணப்பிக்கவும்.
OBC சான்றிதழ் பெறுவதில் உள்ள இரண்டு முக்கிய விசயங்கள்:
* அப்பா, அம்மா வருமானம் தான் மட்டும் பார்க்க வேண்டும். உங்கள் வருமானத்தையோ கணவர்/மனைவி/உடன் பிறந்தவர் வருமானத்தையோ கணக்கில் கொள்ளக் கூடாது.
* சம்பளம், விவசாய வருமானத்தைக் கணக்கில் கொள்ளக் கூடாது.
இதைச் சொல்வது தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம்.
யாராவது OBC சான்றிதழ் பெறுவதில் சிக்கல் இருந்தால் மறுமொழியில் இணைத்துள்ள கோப்பு - 1ல் கடைசி பக்கத்தில் உள்ள மூன்று புள்ளிகளை மட்டும் பாருங்கள். மற்றும், மறுமொழியில் உள்ள இணைப்பை உள்ளூர் அதிகாரியிடம் காட்டி முறையிட்டு சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
தேவைப்பட்டால் ஒரு வழக்கறிஞரையும் அழைத்துக் கொண்டு போய் சண்டை பிடியுங்கள்.
OBC சான்றிதழ் கொடுத்த பிறகும், உங்கள் தனிப்பட்ட வருமானத்தைக் காட்டி உங்கள் விண்ணப்பத்தை நிராகரித்தால், அதற்கும் வழக்கு தொடுங்கள்.
இல்லாவிட்டால், இந்த OBC இடங்கள் காலியாகவே வைக்கப்பட்டு பொதுப்போட்டிக்கு நகர்த்தப்படுகிற ஆபத்து உண்டு.
உங்கள் உரிமையை விட்டுத் தராதீர்கள்.
இச்செய்தியை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்குப் பரப்பி உதவுங்கள்.
(தொடர்புடைய இணைப்புகள் மறுமொழியில்)
#obc #reservation
https://www.thehindu.com/news/national/ugc-gives-6-months-to-fill-all-faculty-vacancies/article27474370.ece
http://pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1559061
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...