புதுவையில் மாணவர்களுக்கு முன்றாம் பருவ பாட புத்தகம் வழங்குவதில் தாமதம்:
காரைக்காலில் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து 
15 நாள்களுக்குப் பிறகு, மாணவர்களுக்கான இலவச பாடப் புத்தகங்கள் கடந்த 2 
நாள்களாக விநியோகிக்கப்படுகிறது.
முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி பாடப் 
புத்தகம் தமிழகத்திலிருந்து பெறப்பட்டே புதுவை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு
 வழங்கப்பட்டு வருகிறது. 3-ம் பருவப் பாடப் புத்தகங்கள் மாணவர்கள் 
அரையாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிக்குச் சென்றதும் வழங்கப்பட வேண்டும். 
ஆனால் புதுவை அரசு நிதி தட்டுப்பாடு பிரச்னையில் சிக்கியுள்ள நிலையில், 
குறித்த காலத்தில் பாடப்புத்ககம் வரவழைக்க முடியாத நிலை இருந்தது. இதனால் 
அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை இந்த ஆண்டு கூடுதலாக 10 நாள்கள் 
அளிக்கப்பட்டு கடந்த மாதம் ஜன., 21ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி 
திறந்தும் பள்ளிகளுக்கு கல்வித்துறை 3-வது டேர்ம் பாடப் புத்தகம் அனுப்பி 
வைக்க முடியாததால், மாணவர்கள் கடந்த 15 நாள்களாக நடப்பு பாடத்தை படிக்க 
முடியாமல் போனது.
தற்போது காரைக்கால் மாவட்ட கல்வித் துறை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை 
3-ம் டேர்ம் பாடப் புத்தகங்கள் வந்து சேர்ந்தது. இதனை உடனடியாக அந்தந்த 
பள்ளி நிர்வாகத்தை அழைத்து விநியோகிக்கும் பணியை கல்வித்துறை 
மேற்கொண்டுள்ளது. 
காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 
முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் வந்துவிட்டதாகவும், 110 
பள்ளிகளுக்கு விநியோகம் செய்துவருவதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் நேற்று 
தெரிவித்தனர்.
 









 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
