பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 28 முதல் துவக்கம்:
பிளஸ் 2 பொதுத்தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 28 முதல் துவக்கலாம் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை மார்ச் 28ம் தேதி
முதல் தொடங்கலாம் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களின் விடைத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்
அவற்றை பாதுகாக்க தனி காவல் படையை நியத்துள்ளதாகவும் தேர்வுத்துறை
அறிவித்துள்ளது.








