- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


சிவில் சர்வீசஸ் தேர்வில் அதிரடி மாற்றங்கள்!

சிவில் சர்வீசஸ் முதன்மை மற்றும் நேர்காணல் தேர்வில் யு.பி.எஸ்.சி., அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. புதியமுறைப்படி ஆங்கில மொழிப்பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, பொது அறிவுக்கு 40 சதவீத முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.


புதிய மாற்றங்கள் குறித்து கோவை இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சியாளர் மற்றும் அரசு கல்லுõரி பேராசிரியர் கனகராஜ் கூறியதாவது:
தற்போது புதிய முறைப்படி முதன்மை தேர்வில் 4 பொது அறிவுத்தாள் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு தாளுக்கும் 250 மதிப்பெண்கள் வீதம் இதற்கு மொத்தம் 1000 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், சர்வதேச அரசியல் அமைப்பு, இந்திய பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன் ஒரு தாள் தார்மீகம், நேர்மை, பண்பு நலன்கள் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. பழைய பாடத்திட்ட முறைப்படி இரண்டு தாள்களுக்கு 600 மதிப்பெண்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதில் இந்திய மொழித்தாள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. அதாவது இத்தேர்வில் 22 இந்திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழிப்பாடத்தை தேர்வு செய்து எழுத வேண்டும். ஆனால் தற்போது இந்த தாள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக பொது ஆங்கிலத்தாளுக்கு இருந்த 300 மதிப்பெண்கள் புதிய முறைப்படி 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய முறைப்படி பொது ஆங்கிலத்தாள் தகுதித்தேர்வாக மட்டுமே இருந்தது. தற்போது இதில் பெறும் மதிப்பெண்கள் தரப்பட்டியலில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
உலகமயமாதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சியில் ஆங்கில மொழித்திறன் அனைத்து துறைகளிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் ஆங்கில புலமை சற்று குறைவாக உள்ளது என்ற பொதுவான கருத்து மத்திய பொது பணியாளர்கள் தேர்வாணையத்திடம் இருந்தது. வெளியுறவு  இதன் வெளிப்பாடாகவே தற்போது ஆங்கிலப்பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொது கட்டுரை தாளில் எவ்வித மாற்றங்களும்  செய்யப்படவில்லை. ஆனால் விருப்ப பாடங்களில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பழைய முறைப்படி 2 விருப்ப பாடம் 4 தாள்களாக இருந்தது. புதிய முறைப்படி 1 விருப்பப்பாடம் 2 தாள்களாக உள்ளது. ஒரு தாளுக்கு 250 வீதம் 500 மதிப்பெண்கள் இதற்கு வழங்கப்பட்டுள்ளது. பழைய மொத்த மதிப்பெண்ணுடன் ஒப்பிடும் போது 800 மதிப்பெண்கள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இலக்கிய பாடங்களை விருப்ப பாடமாக தேர்வு செய்யும் மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பில் அந்த இலக்கியப் பாடத்தை கட்டாயம் பயின்று இருக்க வேண்டும். இம்மாற்றங்களுடன் தற்போது 8 தாள்களுக்கு 1800 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

நேர்காணல்:

சிவில் சர்வீசஸ் தேர்வில் மூன்றாம் கட்டமும், முக்கியத்துவம் பெற்றுள்ளதும் நேர்காணல் தேர்வு. இதில் நிர்ணயிக்கப்பட்டு இருந்த 300 மதிப்பெண்கள் தற்போது 275 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டுள்ளது. பல நன்மைகளை மனதில் கொண்டு மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் இந்த மாற்றங்ளை அறிமுகப்படுத்தயுள்ளது.

புதிய முறை

ஆரம்ப கட்ட தேர்வு (2 தாள்கள்)

1. பொது அறிவு-  200 மதிப்பெண்
2. பொது அறிவு-  200 மதிப்பெண்
                         -----                  
         மொத்தம்    400

                         -----
முதன்மை தேர்வு  (8 தாள்கள்)
1.  பொ. அ., தாள் 1 - 250
2. பொ.அ.,  தாள் 2  - 250
3. பொ.அ., தாள் 3   - 250
4 பொ . அ ., தாள் 4- 250
5.பொது ஆங்கிலம்   -100
6. கட்டுரைத்தாள்     - 200
7. விருப்ப பாடம்
முதல் தாள்            - 250
8 விருப்ப பாடம்
இரண்டாம் தாள்      -250
                             ------
மொத்தம்                1800
                             ------
நேர்காணல் தேர்வு:
நேர்காணல் தேர்வு -- 275
தரப்பட்டியல்  = முதன்மை தேர்வு +  நேர்காணல்
                               1800            +       275
புதிய முறைப்படி ஆங்கில மொழிக்கும், பொது அறிவுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இத்தேர்வில் தமிழக மாணவர்கள் 15 முதல் 20 சதவீத அதிக வெற்றியை பெற்று வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை தமிழக மாணவர்கள் தேசிய அளவில் முதல் தரத்தை பெற்றுள்ளனர். தற்போது ஆங்கிலம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதால் கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சி பெறுவது சற்று கடினம். அதிக விடாமுயற்சி அவசியம்.
இந்த மாற்றத்திற்கு ஏற்ப கல்வியாளர்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்கள் மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டும். ஆங்கில அறிவு, மென்திறன், திறன் அறிவு, தலைமைப் பண்புகள், தகவல்தொடர்பு திறமை, குழு மனப்பான்மை போன்றவகளை மாணவர்கள் மத்தியில் வளர்ப்பதற்கு கல்வியில் ஈடுபட்டுள்ள அனைவரும் முயற்சிக்கவேண்டும்.

 

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H