10ம் வகுப்பு: விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் துவக்கம்:
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவவடைந்து, விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் துவங்கப்படுகிறது.
விடைத்தாள் திருத்தும் இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ம் தேதி ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
அதில்
விழுப்புரத்தில் தேர்வெழுதிய மாணவர்களில் 221 மாணவர்களின் ஆங்கிலம் முதல்
தாள் விடைத்தாள் காணாமல் போய்விட்டது.
இதன்படி காணாமல் போன 221 மாணவர்களுக்கும் ஆங்கிலம் இரண்டாம் தாளில்
பெற்ற மதிப்பெண்களையே, முதல் தாளுக்கும் வழங்க வேண்டும் என்று தேர்வுகள்
இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.








