எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் நிறைவு:
சென்னை மற்றும் புச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வுகள் எளிதான சமூக அறிவியல் தேர்வுடன் நிறைவடைந்தன.
கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நடைபெற்று
வந்தன. சுமார் 11 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதி வந்தனர்.
கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற கணிதத் தேர்வு கடினமான, எதிர்பாராத வினாக்களைக்
கொண்டிருந்தது. இது மாணவர்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதேபோல் மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற தமிழ் இரண்டாம் தாள் தேர்வில்,
வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது தொடர்பான வினாவுக்கு உரிய படிவம்
வழங்காததால் சிறிய குழப்பம் நேரிட்டது. இந்த நிலையில் நேற்று சமூக அறிவியல்
தேர்வுகள் நடைபெற்றன.
இறுதித் தேர்வில் தாங்கள் எதிர்பார்த்திருந்த வினாக்களே
கேட்கப்பட்டிருந்ததாகவும், தேர்வை சிறப்பான முறையில் எழுதியிருப்பதாகவும்
மாணவர்கள் தெரிவித்தனர். சராசரி மாணவர்களும் எளிதில் விடையளிக்கும் விதமாக
ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினாக்கள், வரைபட வினாக்கள் இடம்
பெற்றிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
சமூக அறிவியல் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப் பெற்று
விடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள சமூக அறிவியல் ஆசிரியர்கள், பல
மாணவர்கள் முழு மதிப்பெண் (சென்டம்) பெறவும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகத்
தெரிவித்தனர்.








