Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
மாணவர்
சேர்க்கையை அதிகரிப்பதற்காக, கடந்த கல்வியாண்டில், ஊராட்சி ஒன்றிய தொடக்க,
நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில்
ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில்,கடந்த வெள்ளிக்கிழமை சட்டப்
பேரவையில் பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீது விவாதம்
நடைபெற்றது. அப்போது விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அந்த துறையின்
அமைச்சர் வைகைச் செல்வன், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை
விரிவுபடுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
மொத்தம் 320 பள்ளிகளில், 1 மற்றும் 6ம்
வகுப்புகளில், வகுப்புக்கு இரு பிரிவுகள் வீதம் 640 பிரிவுகள்
தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மாணவர்கள் பயின்று வருகின்றனர். சட்டப் பேரவையில் அமைச்சரின்
அறிவிப்பின்படி, வரும் கல்வியாண்டில் தேவைப்படும் அனைத்து அரசுத் தொடக்கப்
பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில்
ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட இருக்கின்றன.
இதன் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம்
மாணவர்கள் அரசுப் பள்ளிகள் மூலம் ஆங்கில வழிக் கல்வி பயில்வார்கள். அரசுப்
பள்ளிகளில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தத் திட்டமானது, ஏற்கெனவே, அரசு
உதவி பெறும் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் சுயநிதிக் கல்வி
அடிப்படையில் நடைமுறையில் உள்ளது.இதற்கு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட
பாடத்திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலை என்ன? இந்த
திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த
ஆண்டு ஆங்கில வழிக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்ட விருதுநகர் மாவட்ட அரசுப்
பள்ளி ஒன்றில் மாணவர்களின் நிலை தற்போது எப்படியிருக்கிறது ? ஒரு சிறப்புப்
பார்வை.......
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை
அடுத்த பந்தல்குடி என்னும் ஊரில் இந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்
கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில வழிக்கல்வி
அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்ற ஆண்டு போதிய விழிப்புணர்வு
இல்லாததால் வெறும் பத்து மாணவர்கள் மட்டுமே ஆங்கில வழிக்கல்வி மூலம் படித்த
நிலையில் இந்த ஆண்டு இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆங்கில வழிக்கல்வி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆங்கில வழிக்கல்வியில்
பயிலும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க, பி.எட்., (B.ED) படித்த ஆசிரியர்கள்
நியமிக்கப்படுவார்கள் என்றும், ஆங்கில வழி மாணவர்களுக்கும் இலவச உணவு,
சீருடை என பல சலுகைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில வழி கல்வி...ஆதரவும்..எதிர்ப்பும்: அரசுப்
பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி விரிவாக்கம் செய்யும் திட்டம் குறித்து
கல்வியாளர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தங்கள்
ஆதரவையும், எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளனர்.
தனியார் நிறுவனமாகட்டும், அரசு
அலுவலகமாகட்டும் வேலைவாய்ப்பின் போது ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம்
அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை
விரிவாக்கம் செய்வது வரவேற்கத்தக்கது என கல்வியாளர் புருஷோத்தமன்
தெரிவித்துள்ளார்.
நன்மைகள் பல இருந்தாலும் அரசின் இந்த முயற்சி மாணவர்களுக்கு நன்மை பயக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








