சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்துக்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு:
தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர்கள் பணி
நியமனத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு
மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்டஆட்சியர்லி.சித்ரசேனன்வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஓவியம், தையல், உடற்கல்வி மற்றும் இசை ஆகிய சிறப்பு ஆசிரியர்பணியிடங்கள் பதிவு மூப்பு அடிப்படையில்
நிரப்பப்படவுள்ளன.இதற்காக
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வரும் பதிவுதாரர்கள் பட்டியல்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.எனவே பதிவுதாரர்கள்,
இப்பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம்.
இப்பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள், தங்களது அனைத்து சான்றிதழ்கள்
மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன் வரும் ஜூன் 10-ம் தேதிக்குள்
மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநரை அணுகலாம் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.








