எம்.பி.பி.எஸ்., படிப்பு: ரேண்டம் எண் 7ம் தேதி வெளியீடு:
மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளோருக்கு, நாளை, ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, இந்த ஆண்டு, 29 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், "கட்-ஆப்&' மதிப்பெண், பிறந்த தேதி, நான்காவது பாட மதிப்பெண் ஆகியவை, ஒன்றாக இருக்கும் பட்சத்தில், அவர்களில் யாரை, முதலில் கலந்தாய்விற்கு என்பதற்காக, ரேண்டம் எண் வழங்கப்படுகிறது.
பத்து இலக்க எண்ணான இந்த, ரேண்டம் எண், யாருக்கு அதிக மதிப்புடன்
இருக்கிறதோ, அந்த மாணவர், முதலாவதாக கலந்தாய்விற்கு அழைப்படுவர். மருத்துவ
படிப்பு விண்ணப்பதாரர்களுக்கான, ரேண்டம் எண், நாளை மதியம்
வெளியிடப்படுகிறது.
ஆண்டுதோறும், பொறியியல் படிப்பு விண்ணப்பதாரர்களை ஒப்பிடும் போது,
மருத்துவ படிப்பு விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்
என்பதால், மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், ரேண்டம் எண்
அரிதாகவே பயன்படுகிறது என, மருத்துவக் கல்வி இயக்க வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...