கல்லூரியை தேர்ந்தெடுக்க சில டிப்ஸ்:
மாணவர்கள் எந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது, அவ்வாறு
தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரியில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்குமா
என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ள நேரமிது. மாணவர்கள் பதறாமல் நிதானமாக
யோசித்து நல்ல கல்லூரி எது என்று தேர்வு செய்து, அதன் பிறகு சேரலாம்.
கல்லூரியை தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில..........
* கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அங்குள்ள ஆசிரியர்கள், வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட வசதிகளைப் பார்க்க வேண்டும்.
* விடுதி வசதிகள், மொத்தக் கட்டணம், ஆராய்ச்சி மற்றும் விளையாட்டுக்கு
அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்றவற்றைப் பார்க்க வேண்டும். அவற்றை
அடிப்படையாக வைத்து கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம்.
* அந்தக் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள் என்.பி.ஏ.வால் அங்கீகரிக்கப்பட்டவையா என்று பார்க்க வேண்டும்.
* கடந்த ஆண்டு அந்தக் கல்லூரியில் மொத்த தேர்ச்சி விகிதம்,
படிக்கும்போதே வேலைவாய்ப்பைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றையும்
கணக்கில் கொள்ள வேண்டும்.
* அந்தக் கல்லூரி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது, அங்குள்ள கலாசாரம்,
வளாகத்தில் கல்விக்கு ஏற்ற சூழல் நிலவுகிறதா உள்ளிட்ட விஷயங்களையும்
கருத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு முக்கியமான சிலவற்றை விசாரித்த பின்பு, கல்லூரியை தேர்வு செய்து படிப்பது மாணவர்களுக்கு நன்னை பயக்கும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...