பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் 16 பேர் பரிதாபமாக இறந்தனர்:
பீகாரில், பள்ளியில், மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள், 16 பேர் திடீரென இறந்தனர்; மேலும், 40க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சரண் மாவட்டம், தர்மாசதி கந்தாவான் கிராமத்தில் உள்ள, அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, நேற்று மதியம், அரிசி, பருப்பு வகைகள் மற்றும் சோயா பீன்ஸ் கலந்த, மதிய உணவு வழங்கப்பட்டது. இதைச் சாப்பிட்டதும், மாணவர்கள் அடுத்தடுத்து, வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.
அனைவரையும், பள்ளி ஆசிரியர்கள், உடனடியாக சாப்ரா நகர மருத்துவமனைக்கு
கொண்டு சென்றனர். அங்கு, 11 மாணவர்கள் பலியாயினர்; மற்ற 48 மாணவர்களுக்கு
தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழந்த மாணவர்களின், குடும்பத்திற்கு,
தலா, இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் நிதிஷ்குமார்
அறிவித்துள்ளார்.
அத்துடன், விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த கிராமம்,
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலுவின் சாப்ரா லோக்சபா தொகுதிக்கு உட்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...