சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் விவேகானந்தர் பற்றிய புதிய படிப்பு:
தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில், இந்தாண்டு முதல் விவேகானந்தர் குறித்து புதிய பாடத்திட்டத்தை துவங்கியுள்ளது.சுவாமி விவேகானந்தரின் 150-வது ஆண்டு ஜெயந்தி நாடு முழுவதும்
கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் முதல் முறையாக,
தஞ்சையிலுள்ள சாஸ்த்ராபல்கலைக்கழகத்தில், சுவாமி விவேகானந்தரின் 'வாழ்வும்
செய்தியும்' என்ற புதிய பாடத் திட்டத்தை அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக விதிமுறைகளின்படி மூன்று கிரெடிட் கொண்ட இப்பாடம் பி.டெக்., மாணவர்களுக்கான விருப்பப் பாடமாக இருக்கும்.
நரேந்திரனாகத் துவங்கிய வாழ்க்கை - ஸ்ரீராமகிருஷ்ணரின் சந்திப்பிற்குப்
பின் சந்நியாசம் - மேலை நாடுகளில் சென்று பாரத ஆன்மிக ஒளிபாய்ச்சித்
திரும்பிய ஞானசூரியனாக சுவாமிஜியின் சாதனைகள் இந்தப் பாடத்திட்டத்தில் இடம்
பெற்றுள்ளன. இளைஞர்களுக்கு சுவாமிஜியின் அறைகூவல், பாரதப் பெண்மையின்
தன்மை, சமயங்களிடையேயான நல்லுறவு போன்ற இன்றைய தேவைகளும் இந்தப்
பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
மாணவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் தருகிற இத்தகைய முயற்சிகளில்
கல்வி நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும். நல்லொழுக்கத்துடன் கூடிய
திசையில் பயணித்து வரும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சுவாமி விவேகானந்தரைப்
பற்றிய கல்வியையும் ஆராய்ச்சியையும் இப்பல்கலையில் வழங்கப்படுகிறது.








