ஜூலை 8 முதல் தொடக்கக் கல்வி பட்டய படிப்புக்கான கலந்தாய்வு:
2013-14ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி
பட்டயப் பயிற்சியில் மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி
முதல் 15ம் தேதி வரை ஆன்லைனில் நடைபெற உள்ளது.அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மையத்தில் இந்த கலந்தாய்வு நடைபெறும்.
மொத்தமுள்ள 539 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 17,045 மாணவ சேர்க்கை
இடங்களுக்கு 4,430 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்
அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இட ஒதுக்கீட்டு
விதிமுறைகளின்படி கலந்தாய்வு நடைபெறும்.
விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்களது அனைத்து அசல் கல்விச்
சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். காலை 9 மணிக்கு கலந்தாய்வு
துவங்குகிறது.
கலந்தாய்வு விவரம்
1. 08.07.2013 - சிறப்பு பிரிவினர், சிறுபான்மை மொழியில் விண்ணப்பித்துள்ளவர்கள், ஆங்கில மொழியில் பயில விண்ணப்பித்துள்ளவர்கள்.
2. 09.07.2013 - தொழிற்பிரிவினர்
3. 10.07.2013 - 11.07.2013 - கலைப்பிரிவினர்
4. 12.07.2013, 13.07.2013, 15.07.2013 - அறிவியல் பிரிவினர்.
தரவரிசை உட்பட அனைத்து விவரங்களையும் www.tnscert.org என்ற இணைய தளத்தில் காணலாம்.








