10ம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு:
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு முடிவுகள் இன்று
ஆகஸ்ட் 8ம் தேதி 12 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசுத்
தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தேர்வர்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஆகஸ்ட் 19 மற்றும் ஆகஸ்ட் 20ம்
தேதிகளில், அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே நேரில் சென்று பெற்றுக்கொள்ள
வேண்டும்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நாள், சிறப்புத் தேர்வுக்கு
விண்ணப்பிக்க வேண்டிய நாள் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என அரசுத்
தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.








