சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆன்லைன் கற்றல் முறை:
மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ),
பாடங்களை ஆன்லைன் வழியாக பயில்வதற்கு, தனிப்பட்ட ஆன்லைன் கற்றல் தீர்வுகளை
விரைவில் கொண்டுவர முடிவு செய்துள்ளது.இதன்மூலம் பாடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளடங்கி இருக்கும்.
மாணவர்கள் வசதிகேற்ப விரும்பும் பாடத்தை எடுத்து படித்து கொள்ளலாம்.
பாடங்களை வேகமாக கற்பதற்கு இம்முறை மாணவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
ஆன்லைன் முறையில் கற்பதால், மாணவர்களின் புத்தகச் சுமை குறையும். தங்களின் வசதிக்கு ஏற்ப, பாடங்களை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
மேலும் 2D மற்றும் 3D முறையிலும், நேரடியாக ஆசிரியர்கள் கற்பிக்கும்
வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்முறையால் எண்ணற்ற மாணவர்கள்
பயன்பெறுவர்.
அனிமேஷன் முறையில் பாடங்களை கொண்டு வருவதால், மாணவர்கள் தேவைப்படும்
நேரத்தில் படித்து புரிந்துக் கொள்ள முடியும். இதனால் மாணவர்களின் ஆர்வம்
அதிகரிப்பதோடு, படிக்க எளிமையாக இருக்கும். விரைவில் இந்த ஆன்லைன் கற்றல்
முறையை வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.








