Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
கடந்த ஆண்டு, இரு டி.இ.டி., தேர்வுகளை, டி.ஆர்.பி., நடத்தியது. முதல்
தேர்வை, 7 லட்சம் பேர் எழுதிய போதும், வெறும், 3,000 பேர் மட்டுமே தேர்ச்சி
பெற்றனர். இரண்டாவதாக நடந்த தேர்வில், 19 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர்.
இந்நிலையில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு, நாளையும், நாளை மறுநாளும்
நடக்கிறது. நாளை காலை, 10:00 மணி முதல் பகல், 1:00 மணி வரை, இடைநிலை
ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான முதல் தாள் தேர்வு நடக்கிறது. இத்தேர்வை,
2.67 லட்சம் பேர் எழுதுகின்றனர். 18ம் தேதி நடக்கும், பட்டதாரி
ஆசிரியருக்கான இரண்டாம் தாள் தேர்வை, 4.11 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும், முழுவீச்சில் செய்யப்பட்டிருப்பதாக,
டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யார் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிவிப்பு: தேர்வை, அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து
ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட கலெக்டர்களுடன், ஆலோசனை நடத்தி,
தேர்வை, சிறப்பான முறையில் நடத்துவதற்கு, அனைத்து ஏற்பாடுகளும்
செய்யப்பட்டுள்ளன. கலெக்டர்கள், மாவட்ட தேர்வுக்குழு தலைவராக செயல்படுவர்.
டி.ஆர்.பி., அதிகாரிகள், மண்டல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்வித்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், 32 பேர், மாவட்டத்திற்கு
ஒருவர் வீதம், 32 மாவட்டங்களுக்கும், கண்காணிப்பு அதிகாரிகளாக
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல் தாள் தேர்வுப் பணியில், 29 ஆயிரம்
பணியாளர்களும், இரண்டாம் தாள் தேர்வுப் பணியில், 42 ஆயிரம் பணியாளர்களும்
ஈடுபடுத்தப்படுவர்.
மாற்றுத்திறனாளிகள், தரைத்தளத்தில் தேர்வெழுத, ஏற்பாடுகள் செய்யப்பட்டு
உள்ளன. கூடுதலாக, 30 நிமிடங்கள் பார்வையற்றவர்களுக்காக, வேறொருவர்
தேர்வெழுதவும், இவர்களுக்காக, கூடுதலாக, 30 நிமிடங்கள் ஒதுக்கவும்,
ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தேர்வுக்கு வசதியாக, சி.பி.எஸ்.இ.,
பள்ளிகள் உட்பட, அனைத்து வகை பள்ளிகளுக்கும், 17ம் தேதி, அரசு, விடுமுறை
அறிவித்துள்ளது. இவ்வாறு, விபு நய்யார் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பணியை, பெண்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இதனால், ஆசிரியர்
படிப்பு படிப்பவர்களில், பெண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர். இதனால்,
டி.இ.டி., தேர்வை எழுதுவோரிலும், பெண்களே, அதிகமாக உள்ளனர். முதல் தாள்
மற்றும் இரண்டாம் தாள், இரண்டிலும் சேர்த்து, 6.79 லட்சம் பேர், தேர்வை
எழுதுகின்றனர். இவர்களில், ஆண்கள், 27 சதவீதமாகவும், பெண்கள், 73
சதவீதமாகவும் உள்ளனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








