- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Monday 19 August 2013

அரசுப் பள்ளிகளுக்கு 36,600 மரக்கன்றுகள்: சுற்றுச் சூழல் மன்றம் ஏற்பாடு:

சுற்றுச் சூழல் மன்றம் சார்பாக அரசு பள்ளிகளில், 36 ஆயிரத்து 600 மரக் கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது.உலகம் முழுவதும் வனப் பகுதிகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதுடன், நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் புவி வெப்பமயமாதல், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், பனிப்பாறைகள் உருகி கடலின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளின் வானிலை பாதிக்கப்பட்டு அதிக வெப்பம் மற்றும் பருவ மழை மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து, உலகம் முழுவதும் மரங்களை பாதுகாப்பது மற்றும் புதிய மரக்கன்றுகளை நடவு செய்வதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்கள் மத்தியில், புவி வெப்பமயமாதலை தடுக்க, மரக்கன்றுகளை நடுவது மற்றும் அவற்றை பாதுகாப்பதின் அவசியத்தை கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து கடந்த, 2012ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில், பள்ளிக் கல்வித்துறை சார்பாக சுற்றுச் சூழல் மன்றத்தை உருவாக்கியது.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை நியமித்தது, அவர்கள் மூலம் தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும், மரக்கன்றுகள் நடவு செய்ய மற்றும் அவற்றை பராமரிக்க தேர்ந்தெடுக்கப்படும், ஒவ்வொறு பள்ளிகளுக்கும் தலா, இரண்டாயிரத்து 500 ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிகளிலும் தலா, 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தர்மபுரி மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் கூறியது:
பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவுபடி தர்மபுரி மாவட்டத்தில், சுற்றுச் சூழல் மன்றம் 159 பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் மத்தியில் மரக்கன்றுகளை வளர்க்கும் ஆர்வத்தை கொண்டு வர, மாவட்ட நிர்வாகம் மற்றும் சி.இ.ஓ., மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
அவர்களின் ஆலோசனைபடி மரம் வளர்ப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பட "சிடி", 159 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மரக்களின் பயன் குறித்த புத்தகங்கள், 159 பள்ளிகளுக்கும் தலா, ஐந்து புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. 2013-2014ம் ஆண்டும் மேலும், 100 பள்ளிகளில் சுற்றுச் சூழல் மன்றம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுச் சூழல் மன்றம் சார்பாக, நம் பள்ளி, நம் தோட்டம் என்பதை வலியுறுத்தி, வனத்துறை உதவியுடன், தமிழகத்தில் முன் மாதிரியாக மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகளில் 36, 600 மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தர்மபுரி யூனியனில் உள்ள 154 பள்ளிகளில் 4,280 மரக்கன்றுகளும், நல்லம்பள்ளி யூனியனில் உள்ள 190 பள்ளிகளில் 5,370 மரக்கன்றுகளும், பென்னாகரம் யூனியனில், 229 பள்ளிகளில் 6,410, பாலக்கோடு யூனியனில், 164 பள்ளிகளில், 4,380. காரிமங்கலம் யூனியனில், 160 பள்ளிகளில், 4,200, மொரப்பூர் யூனியனில், 164 பள்ளிகளில், 4,460, பாப்பிரெட்டிப்பட்டி யூனியனில், 107 பள்ளிகளில், 3,700, அரூர் யூனியனில், 162 பள்ளிகளில், 4,300 மரக்கன்றுகள் என, 36 ஆயிரத்து, 600 மரக்கன்றுகள் நடமுடிவு செய்யப்பட்டுள்ளது.
மரக்கன்றுகள் நடும் விழா விரைவில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H