பிஎட் தேர்வு முடிவுகள் வெளியீடு இணையதளம் முடங்கியது மாணவர்கள் பரிதவிப்பு:
தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும்
கல்வியியல் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பிஎட்
கல்லூரிகளும் உள்ளன. பிஎட் படிப்பிற்கான இறுதித் தேர்வு கடந்த மே மாதம்
27ம் தேதி முதல் ஜூன் 10ம் தேதி வரை நடந்தது. இதற்கான விடைத்தாள் மதிப்பீடு
செய்யும் பணி சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய 5 மையங்களில்
நடந்தது. இதைத் தொடர்ந்து பிஎட் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு ஆசிரியர்
கல்வியியல் பல்கலைக்கழகம் நேற்று அதன் இணையதளத்தில் (http://results.southindia.com/TNTEU_Bed_MAY_2K13.html)
வெளியிட்டது.இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக மாணவ,
மாணவிகள் அனைவரும் ஒரே நேரத்தில் முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால் இணையதள
இணைப்பு கிடைப்பதில் மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது. இணையதளம் முடங்கியதால்
தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை
ஏற்பட்டது. ஒரு சில மாணவர்களுக்கு அக மதிப்பீடு (இன்டர்னல்) மதிப்பெண்கள்
விடுபட்டிருந்தன.