- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Saturday 24 August 2013

வரலாறு: அருங்காட்சியகத்தில் குவியும் குப்பைகளால் வரலாற்று சின்னங்கள் அழியும் அபாயம்:

 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று நினைவு சின்னங்கள் அமைந்த அருங்காட்சியகம் குப்பைகள் கொட்டும் இடமாக சீரழிந்து வருகிறது.விழுப்புரம் அடுத்த அரசலாபுரம் கிராமத்தில் இருந்த கோழி நடுக்கல், திருக்கோவிலூர் அடுத்த ஆயந்தூர், ஆமூர், சென்னகுணம், கொளத்தூர் ஏரிகளில் இருந்த பழமையான கல்வெட்டுகள் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் கொண்டு வரப்பட்டது.

இந்த கல்வெட்டுகள் மூலம் விழுப்புரம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் விழுப்புரம் கோட்டம் 1051எஸ்/இவஅ2/கோ 255 நாள்: 21.05.92ம் ஆண்டு ஆணையின் படி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. தென்னாற்காடு மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் பச்சைமுத்து மூலம் இந்த அருங்காட்சியகம் கடந்த 1992ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி திறக்கப்பட்டது.
இந்த நினைவு சின்னங்களில் அரசலாபுரத்தில் இருந்து கொண்டு வந்த கோழி நடுக்கல்லின் காலம் மட்டும் கி.பி., 3ம் நூற்றாண்டு ஆகும். வரலாற்று ஆய்வாளர்களால் இந்த நடுக்கல் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. விழுப்புரத்தில் அரசு சார்பில் அருங்காட்சியகம் இல்லாத சூழலில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த நினைவு சின்னங்கள், வரலாற்று ஆய்வாளர்களுக்கு பெரிதும் பயன்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலக வடக்கு பகுதியில், அருங்காட்சியகம் இருந்த இடத்தில், சைக்கிள் ஷெட் கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து அதனருகே மைய பகுதியில் சிறிய கோவில் கட்டடப்படுகிறது. சைக்கிள் ஷெட் மற்றும் கோவில் வந்ததால் அருங்காட்சியகத்திற்கு வைத்திருந்த நடுக்கல் மற்றும் கல்வெட்டுகள் அனைத்தும் கடைசிக்கு தள்ளப்பட்டுள்ளது.
தற்போது அருங் காட்சியம் இடம் குப்பைகள் கொட்டும் இடமாக பயன்படுத்தப்படுகிறது. அழிந்து வரும் நினைவு சின்னங்களை காக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H