ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்:
விருதுநகரில் அசிரியர் தகுதித் தேர்வில் இட
ஒதுக்கீடு அமுல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
அகில இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு இன்று நடந்த
ஆர்ப்பாட்டத்திற்கு ஆகிலந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர்
ஆர்.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கணேசமூர்த்தி, மாவட்ட
துணைச் செயலாளர் எஸ்.டிமிட்ரோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை
உறுப்பினருமான டி.ராமசாமி, வட்டார செயலாளர் எஸ்.சீனிவாசன் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினார்கள்.
இதில், ஆசிரியர் தகுதித் தேர்வை இட ஒதுக்கீடு அடிப்படையில் நிர்ணயம்
செய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப
வேண்டும். ஆங்கில வழிக்கல்வியை கைவிட்டு தமிழ் வழிக் கல்விக்கு
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட
குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், வட்டார துணை செயலாளர் காரஸ் மார்க்ஸ்
உள்ளிட்ட அகிலந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து
கொண்டனர்.