Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் 17, 18
தேதிகளில் நடைபெற்றது. முதல் தாள்மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளை 6
லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இவர்களின் விடைத்தாள்கள்
அனைத்தும் சென்னையிலுள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு
செவ்வாய்க்கிழமை காலை கொண்டுவரப்பட்டன. இதையடுத்து,விடைத்தாள்களை ஸ்கேன்
செய்யும் பணி ஓரிருநாளில் தொடங்கப்பட உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களில்
எந்தவித தவறும் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி
அந்தப் பணிகளை நேரடியாகக்கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்,
ஆசிரியர் தகுதித்தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவது உறுதி
செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு முடிவு:
விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் மூன்று
வாரங்கள் நடைபெற உள்ளன. முக்கிய விடைகள்
வெளியிடப்பட்டு,தேர்வர்களிடமிருந்து ஆட்சேபங்கள் பெறப்படும்.அதன் பிறகு,
இறுதி செய்யப்பட்ட முக்கிய விடைகளும் தேர்வு முடிவுகளும் செப்டம்பர்
இறுதிக்குள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
2 வாரங்களில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு:
முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள்
இரண்டு வாரங்களில்வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்வை1.60 லட்சம்பேர் எழுதினர்.முக்கிய விடைகள் தொடர்பாக மொத்தம்
1,500 பேர் ஆட்சேபங்களை அனுப்பியிருந்தனர். பெரும்பாலும் தமிழ்
பாடத்தில்தான் அதிகளவிலான ஆட்சேபங்களைத் தேர்வர்கள்
அனுப்பியிருந்தனர்.இதில் "பி' வரிசை வினாத்தாள்களில் மட்டும் அதிக
அச்சுப்பிழைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.தவறான கேள்விகள்,அச்சுப்
பிழைகள் தொடர்பாக அந்தந்த பாட நிபுணர்கள் ஆய்வு செய்து ஆசிரியர் தேர்வு
வாரியத்துக்கு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.இந்த அறிக்கைகள் மீது
ஆசிரியர் தேர்வு வாரியும் விரைவில் முடிவு எடுக்கும்எனத் தெரிகிறது.இது
தொடர்பாக, முடிவுசெய்யப்பட்டவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
உதவிப் பேராசிரியர் நியமனம்:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்1,063
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு,நேர்முகத்தேர்வுக்கான பணி ஓரிரு வாரங்களில் தொடங்கும் எனத்
தெரிகிறது.
தேர்வர்கள் ஏமாற வேண்டாம்:
ஆசிரியர் நியமனம் மிகவும் நேர்மையானமுறையில்,
தகுதியின் அடிப்படையில்மட்டுமே நடைபெற்று வருகிறது. எனவே முறைகேடான
முறைகளில் இந்த நியமனத்தைப்பெற்றுத் தருவதாகக் கூறும் யாரையும் நம்பி ஏமாற
வேண்டாம் என ஆசிரியர்தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.போட்டித் தேர்வு
மற்றும் தகுதித் தேர்வு வினாத்தாள்களை முன்கூட்டியே வழங்குவதாகவும்,
மதிப்பெண்ணில் மாற்றம் செய்வதாகவும் கூறி மோசடி நபர்கள் தமிழகம் முழுவதும்
தேர்வர்களிடம் பணம் பறித்து வருகின்றனர். இவர்கள் தருமபுரி, அரியலூர்,
பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் தேர்வர்களை
ஏமாற்றியுள்ளதாகத் தெரிகிறது. போலி வினாத்தாள் மோசடி தொடர்பாக தருமபுரியில்
10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 33 ஆயிரத்து 351ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அனைத்து நியமனங்களும் மிகவும்
நேர்மையாகவும்,வெளிப்படையான முறையிலும் நடைபெற்று வருவதாக ஆசிரியர்தேர்வு
வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








