கல்லூரி விடுமுறை நாட்களில் மடிக் கணினி வழங்க கோரிக்கை:
தமிழக அரசால் வழங்கப்படும் இலவச மடிகணினிகளை மாணவர்கள் நலன் கருதி விடுமுறை நாட்களில் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசு பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக் கணினிகளை வழங்கி வருகிறது. ஆனால் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு முடிவதற்குள் மடிக் கணினிகளை வழங்க முடியவில்லை.
இதனால் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் மடிக் கணினி
வழங்கப்பட்ட தேதி குறித்து ரப்பர் ஸ்டாம்ப் போட்டு தேதி குறிப்பிடாமல்
மாணவர்கள் படிப்பை முடித்து விட்டு வரும்போது கொடுத்தனர். மதிப்பெண்
பட்டியலை எடுத்துச் சென்றால் தான் மடிகணினி வழங்கப்படும். இந்த மாணவர்கள்
தற்போது கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். அவர்கள் கல்லூரியில்
சேரும் போது தங்களது டிசி, மதிப்பெண் பட்டியல்களை கல்லூரியில்
கொடுத்துள்ளனர்.
தற்போது பல பள்ளிகளில் அரசின் இலவச மடிக் கணினிகளை கொடுத்து
வருகின்றனர். இந்த பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முன் கூட்டியே
தகவல்கள் கொடுக்காமல் விழா நடக்கும் முதல் நாள் தகவல்கள் கொடுக்கின்றனர்.
இதனால் மாணவர்கள் கல்லூரியில் கொடுத்த மதிப்பெண் பட்டியலை வாங்க முடியாத
நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இந்த விழாக்கள் கல்லூரி வேலை நாட்களில் நடத்தப்படுவதால்
மாணவர்கள் கல்லூரிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டு விழாவில் பங்கேற்று மடிக்
கணினிகளை வாங்கிச் செல்லும் நிலை உள்ளது. எனவே, மடிக் கணினி வழங்கும்
விழாக்களை கல்லூரி விடுமுறை நாட்களில் நடத்தி மாணவர்களுக்கு வசதியாக
இருக்கும்.