பிளஸ் 2: காலாண்டு பொதுத்தேர்வு இன்று துவக்கம்:
பிளஸ் 2 மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் பொதுவான காலாண்டுத் தேர்வு இன்று துவங்கியது.அதன்படி, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்., 10 முதல் 21ம் தேதி வரை
தேர்வுகள் நடைபெறுகின்றது. இன்று மொழிப்பாடம் முதல் தாள் தேர்வு காலை 10
மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரையிலும் நடைபெறுகிறது. இதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5
நிமிடங்கள் விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்திசெய்யவும் வழங்கப்படும்.
பொதுத்தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சிறப்பான
இடத்தைப் பெறவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் காலாண்டு, அரையாண்டுத்
தேர்வுகளை மாநிலம் முழுவதும் பொதுவான தேர்வுகளாக நடத்தும் முறை கடந்த
ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ஆண்டும் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் பொதுவான தேர்வுகளாக
நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகளுக்கான வினாக்கள் சி.டி.க்களில்
மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு செப்., 12
முதல் 20 வரையிலும் நடைபெற உள்ளன.








