- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Friday 27 September 2013

34 பள்ளிகளில் விற்பனையாளர் இல்லாத கடைகள்:மாணவர்களே பணம் போட்டுவிட்டு பொருட்களை எடுத்துக்கொள்ளலாம் காந்தி பிறந்த நாளில் தொடங்கப்படுகிறது:

34 மாதிரி பள்ளிகளில் காந்தி பிறந்தநாளில் விற்பனையாளர் இல்லாத கடைகள் தொடங்கப்படுகிறது. இதில் மாணவர்கள் பணம் போட்டுவிட்டு, தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட மாநில இயக்குனர் ஆ.சங்கர், இணை இயக்குனர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-சுயகட்டுப்பாடுசாதி, மத பேதமற்ற ஆரோக்கியமான உயர்ந்த சமுதாயத்தை உருவாக்க கல்வியை சுயசிந்தனை, சுயகட்டுப்பாடு, தன்னம்பிக்கை, பொதுநலன், விடாமுயற்சி போன்ற குணங்களை கொண்ட குடிமகனது கடமையாகிறது. இத்தகைய குடிமக்களை உருவாக்குவதில் பள்ளிக்கூடமானது முதன்மையாக திகழ்கிறது.பள்ளிக்கூட சூழல் மட்டுமே இவை அனைத்தையும் ஒரு சேர வழங்குகிறது. குறிப்பாக அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் செயல்படும் மாதிரிப்பள்ளிகள் மாணவர்களின் கற்றல் திறன், விளையாட்டு, ஆளுமைத்திறன் போன்ற திறன்களை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நேர்மை கடைகள்இதன் ஒரு அங்கமாக மாணவர்களிடம் நேர்மை, நாணயம் ஆகிய உயர்ந்த பண்புகளை வளர்க்கும் பொருட்டு பள்ளிகளில் நேர்மை அங்காடி என்ற ஒன்றை காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி தொடங்குவது பொருத்தமாக அமையும். நேர்மை அங்காடி என்பதுயாருடைய மேற்பார்வை (விற்பனையாளர்) இல்லாமல் இயங்கக்கூடிய ஒன்றாகும். இந்த கடைகளில் மாணவர்களுக்கு தேவையான எழுதுபொருட்கள், அதனுடைய விலையை குறிப்பிட்டு வைக்கப்பட்டிருக்கும். தேவையான பொருட்களை மாணவர்கள் அதற்கான பணத்தை அவர்களே அங்குள்ள பணப்பெட்டியில் போட்டுவிட்டு எடுத்துக்கொள்ளலாம்.பேப்பர், பேனாஇந்த கடைகளை தொடங்க அனைத்து மாதிரிப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் உடனடியாக ஏற்பாடு செய்யவேண்டும். கடையின் ஆரம்ப முதலாக ரூ.500ஐ பள்ளி மேலாண்மை நிதியில் இருந்து பயன்படுத்தவேண்டும்.பாதுகாப்பான ஒரு அறையை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் கடையை ஆரம்பித்தல் வேண்டும்.மாணவர்களுக்குள்ளேயே நபர்களை தேர்ந்தெடுத்து கடையை வழிநடத்த வேண்டும். பேப்பர், பேனா, பென்சில், ரப்பர் போன்ற ஸ்டேஷனரி பொருட்களை விற்பனை செய்யவேண்டும். உணவுப்பொருள் விற்கக்கூடாது.லாப நோக்கின்றி பொருட்களின் விலை பட்டியலை கடையின் முன் தெளிவாக வைக்க வேண்டும். விலையை எக்காரணம் கொண்டும் லாபநோக்கோடு நிர்ணயிக்கக்கூடாது. இதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். தினசரி விற்பனை விவரத்தை இறை வழிபாட்டுதலத்தில் படித்து காண்பிக்க வேண்டும்.இந்த கடைகளை அனைத்து மாதிரிப்பள்ளிகளிலும் தொடங்குவதை மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செய்யவேண்டும். இதுபோல பிற பள்ளிகளிலும் தொடங்க முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H