மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படாது: மத்திய அரசு திட்டவட்ட முடிவு:
இதனால், ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஊழியர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இது குறித்து, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர், நாராயணசாமியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளிக்கையில், ""இப்போது வரையில், மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து, அரசுக்கு எவ்வித எண்ணமும் இல்லை. இதை திட்டவட்டமாக தெரிவித்து விடுகிறேன்,'' என்றார். மத்திய அரசு ஊழியர்களின், ஓய்வுபெறும் வயது முன்பு, 58 வரை இருந்ததை, 1998ல் 60 ஆக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் ஓய்வுபெறும் வயது, 62 ஆக உள்ளது.