இளநிலை உதவியாளர் பணி: வேலைவாய்ப்பு மூப்பை சரிபார்க்க அழைப்பு:
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு இன்று வேலைவாய்ப்பு மூப்பை சரிபார்த்துக் கொள்ளலாம்" என, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் துரைராஜ் தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: "தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. இதற்கு பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ., அல்லது ஏதேனும் ஒரு பட்டத்துடன் கம்ப்யூட்டர் ஆஃபீஸ் ஆட்டோமேசன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு மூப்புடைய பதிவுதாரர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, சாதிச்சான்று, ரேஷன் கார்டுடன் இன்று காலை, 11 மணிக்குள் மாவ ட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தங்களது பதிவுகளை சரிபார்த்துக்கொள்ளலாம்.
இதில், வயது வரம்பானது எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ., ஆகியோருக்கு 35 வயதும், பி.சி,, பி.சி.எம்., எம்.பி.சி., ஆகியோருக்கு 32 வயதும், மற்ற பிரிவினருக்கு 30 வயதும் ஆகும்.