தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் முதன்மைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-தமிழ்நாடு
சட்டசபையில் 2013-14-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அரசு
ஊழியர்களுக்காக தனியாக உடல்நல காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று
நிதியமைச்சர் அறிவித்தார்.
CLICK HERE-தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை..
இந்த திட்டத்தை ஓய்வூதியதாரர் மற்றும் அவரது
வாழ்க்கைத்துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் ஆகியோருக்கும் விரிவுபடுத்த
அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான சில புதிய வரைமுறைகளை அரசு
வகுத்தளிக்கிறது. அதன்படி, இந்த புதிய காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டு 4
ஆண்டுகள் வரை ரூ.2 லட்சம் அளவுக்கு ஓய்வூதியதாரர் மற்றும் அவரது
வாழ்க்கைத்துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் பயனடையலாம். ஒரு
குடும்பத்தில் இரண்டு அரசு ஊழியர் இருந்தால், அதில் ஒருவர் மட்டும் இந்த
திட்டத்துக்கான பிரிமியம் செலுத்தினால் போதுமானது.இந்த திட்டம்,
அரசு கருவூலம் மற்றும் அக்கவுண்ட் ஆணையர் அலுவலகம் மூலம் அமலாக்கப்படும்.
காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்த பிறகு, இந்த திட்டத்தில்
ஓய்வூதியதாரரின் பங்களிப்பு எவ்வளவு என்பது குறித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...