அரசுத் துறை நிறுவன தொழிலாளர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஒரு லட்சத்து 95 ஆயிரம் பணியாளர்களுக்கு ரூ.11½ கோடி ஊக்கத் தொகை முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


அரசுத் துறை நிறுவன தொழிலாளர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஒரு லட்சத்து 95 ஆயிரம் பணியாளர்களுக்கு ரூ.11½ கோடி ஊக்கத் தொகை முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில், அரசுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 95 ஆயிரம் பணியாளர்களுக்கு ரூ.11½ கோடி ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.ஊக்கம் இன்றியமையாததுஇதுகுறித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-தனியார் நிறுவனங்கள் என்றாலும், அரசு நிறுவனங்கள் என்றாலும், அரசுத் துறை என்றாலும், ஊக்கம் என்ற உந்து சக்தியே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேம்பாட்டிற்கு ஆதாரமாகவும், தொழிலாளர்களின் செயலாக்கத்தை முடுக்கி விடக் கூடியதாகவும் உள்ளது.
ஊக்கம் அதிகமாக இருந்தால் இலக்கை அடைவதில் அதிக ஆர்வமும், அதற்கான செயலை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்பட்டு, அச்செயல் எளிமையானதாக முடிவதுடன், சிறப்பாகவும் அமைந்திடும்.பணியாளர்களுக்கு ஊக்கம் இன்றியமையாதது என்பதால் தான் மக்களுக்கு சேவை அளிக்கக் கூடிய பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ், பொங்கல் பரிசு, ஊக்கத் தொகை மற்றும் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓய்வூதியப் பயன்கள் என பல்வேறு சலுகைகளை நான் வழங்கி வருகிறேன்.பொங்கலை முன்னிட்டுஇதன் காரணமாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன. இதே போன்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் சேவைகளும் சிறப்புற அமைந்துள்ளன.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு சிறப்புற பணிபுரியும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பொங் கல் திருநாளை முன்னிட்டு ஊக்கத் தொகையினை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.அரசு போக்குவரத்து கழகம்* இதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களில், 2013-ம் ஆண்டில் 91 நாட் கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு ரூ.85 வீதமும்; 151 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு ரூ.195 வீதமும்; 200 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த பணியாளர்களுக்கு ரூ.625 வீதமும் பொங்கல் பரிசாக சாதனை ஊக்கத் தொகை வழங்கப்படும். * இதன் மூலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 332 பணியாளர்களுக்கு ரூ.7 கோடியே 42 லட்சம் சாதனை ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.நுகர்பொருள் வாணிப கழகம்* இதே போன்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் ஏ மற்றும் பி தொகுப்பு அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் செயலாக்க ஊக்கத் தொகையாக ஆயிரம் ரூபாயும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு போனஸ் பெற்ற சி மற்றும் டி தொகுப்பு பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் செயலாக்க ஊக்கத் தொகையாக ரூ.350ம் வழங்கப்படும். அதாவது, 38ஆயிரத்து 899 பணியாளர்களுக்கு ஒரு கோடியே 42 லட்சத்து 80 ஆயிரத்து 260 ரூபாய் செயலாக்க ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.பால் கூட்டுறவு சங்கம்* தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் 17 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள், பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களில், 2013-ம் ஆண்டில் 90 நாட்கள் மற்றும் அதற்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு ரூ.145 வீதமும்; 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு ரூ.240 வீதமும்; 151 நாட்கள் முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த பணியாளர்களுக்கு ரூ.400 வீதமும்; 200 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதமும் பொங்கல் பரிசாக உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். * இதன் மூலம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் 17 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள், பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் சுமார் 25ஆயிரத்து 613 பணியாளர்களுக்கு 2 கோடியே 64 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.ரூ.11½ கோடி ஊக்கத் தொகை* மொத்தத்தில், இந்த அறிவிப்பின் மூலம் ஒரு லட்சத்து 95ஆயிரத்து 844 பணியாளர்களுக்கு 11 கோடியே 49 லட்சத்து 75 ஆயிரத்து 260 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.எனது தலைமையிலான அரசின் இந்த தொழிலாளர் ஊக்குவிப்பு நடவடிக்கை, நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளர்களும், பணியாளர்களும் மேலும் ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும், செயல்பட வழிவகுக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H