சுயநிதி
பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு
இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.கல்விஉதவித்தொகைசென்னை
ஐகோர்ட்டில், கோவை அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளின் நிர்வாக
சங்கத்தின் தலைவர் கே.பரமசிவம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு
இருப்பதாவது:-
அரசு இடஒதுக்கீடு மற்றும் நிர்வாக இடஒதுக்கீடு
ஆகியவற்றின் படி மாணவர் சேர்க்கை நடத்துகிறோம். சுயநிதி பொறியியல்
கல்லூரிகளுக்கு அரசு நிர்ணயித்தபடி கட்டணம் வசூலிக்கிறோம். ஆதி திராவிடர்,
பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிட மாணவர்
ஆகியோருக்கு (அரசு இட ஒதுக்கீடு மற்றும் நிர்வாக இடஒதுக்கீட்டில்
சேர்ந்தவர்களுக்கு) அரசால் நேரடியாக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.ரத்து செய்ய வேண்டும்இந்த
நிலையில் நிர்வாக இடஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்கும் இந்த பிரிவு
மாணவர்களுக்கும், அரசு இடஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான
உதவித்தொகை அளவை மட்டுமே அனுமதிக்கும் வகையில் டிசம்பர் மாதம் அரசாணையை
தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் பாக்கித்தொகையை நிர்வாக
இடஒதுக்கீட்டில் படிக்கும் இந்த பிரிவு மாணவர்களிடம் இருந்து பெறமுடியாத
நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுபோல் மேலும் இரண்டு பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். தடைஇந்த மனுக்களை நீதிபதி வி.தனபாலன் விசாரித்தார். மனுதாரர்கள்
சார்பில் மூத்த வக்கீல்கள் கே.துரைசாமி, முத்துகுமாரசாமி ஆஜராகி, “அரசு இட
ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித்தொகையின்
அளவையே, நிர்வாக இடஒதுக்கீட்டு மாணவர்களுக் கும் வழங்கினால், அது கல்லூரியை
பாதிக்கும். எனவே வழக்கம் போல் நிர்வாக ஒதுக் கீட்டு மாணவர்களுக்கு அதிக
தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிட் டனர். அதைத் தொடர்ந்து அந்த
அரசாணைக்கு இடைக் கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் ஆதிதிராவிட மாணவரின் கல்வி உதவித்தொகை அரசாணைக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு:
சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் படிக்கும் ஆதிதிராவிட மாணவரின் கல்வி உதவித்தொகை அரசாணைக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு:
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |







