பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்
செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்துக்கு
அனுப்பியுள்ள புகார் மனு:
ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்
பெற்றவர்களுக்கு தகுதிச் சான்று வழங்கப்படும். பள்ளி நிர்வாகத் தினர் இட
ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஏற்ப மதிப்பெண் சலுகை வழங்கலாம் என்று தேசிய
ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதல் விதிமுறையில்
தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய
எந்த தகுதித் தேர்விலும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு
வழங்கப்படவில்லை.பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) நடத்தும் நெட்
தகுதித் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.),
ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மதிப்பெண்
தளர்வு வழங்கப்பட்டு இருக்கிறது. முதல் 2 தாள்களில் பொதுப் பிரிவினர்
தேர்ச்சி பெற தலா 40 சதவீத மதிப்பெண்நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில்
இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 35 சதவீத மதிப்பெண் போதுமானது.
உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும்
மதிப்பெண் சலுகை வழங்கக் கூடாது என்று உத்தரவிடவில்லை. எனவே, என்.சி.டி.இ.
வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப்
பிரிவினருக்குமதிப்பெண் தளர்வு வழங்காமல் மறுத்து வருவது சட்டவிரோதம்.
எனவே, ஆதிதிராவிடர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார்
மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...