சென்னையில் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம் கவர்னர் ரோசய்யா தேசிய கொடி ஏற்றினார் வீர தீர செயல் விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Monday 27 January 2014

சென்னையில் குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம் கவர்னர் ரோசய்யா தேசிய கொடி ஏற்றினார் வீர தீர செயல் விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்:

 
சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற குடியரசு தின விழாவில், கவர்னர் ரோசய்யா தேசிய கொடி ஏற்றி வைத்தார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு விருது வழங்கினார்.இந்தியாவின் 65-வது குடியரசு தினவிழா, நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில், காமராஜர் சாலை காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதற்காக, காந்தி சிலை மூவர்ண கொடிபோன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.ஜெயலலிதாவுக்கு வரவேற்பு விழா நடைபெற்ற இடத்திற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலை 7.52 மணிக்கு காரில் வந்தார். அவரது காருக்கு முன்பும், பின்பும் 15 போக்குவரத்து போலீசார் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து வந்தனர். காரில் இருந்தபடி முதல்-அமைச்சர் ஜெயலலிதா, காமராஜர் சாலையில் இருபுறமும் கூடியிருந்த மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் கையசைத்து குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர், விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கவர்னர் ரோசய்யா அவரை தொடர்ந்து, கவர்னர் கே.ரோசய்யா காலை 7.54 மணிக்கு 6 விமானப்படை வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் அணிவகுத்து வர காரில் வந்தார். அவரும் பார்வையாளர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். பின்னர், விழா மேடைக்கு வந்த கவர்னர் ரோசய்யாவை, முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, முப்படை தளபதிகள், உயர் போலீஸ் அதிகாரிகளை கவர்னர் ரோசய்யாவுக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிமுகம் செய்து வைத்தார்.கொடி ஏற்றினார்காலை 8 மணிக்கு கவர்னர் ரோசய்யா, காந்தி சிலை முன்பு தேசிய கொடியை ஏற்றினார். அப்போது, போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று தாழ்வாக பறந்து தேசிய கொடியின் மீது பூமாரி பொழிந்தது. அதைத்தொடர்ந்து ராணுவப்படை, கடற்படை, விமானப்படையினரின் அணிவகுப்பு நடந்தது. தொடர்ந்து, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணை, ரேடார், செயற்கைகோள் போன்றவைகளின் மாதிரிகளுடன் விமானப்படை வாகனமும், நவீன துப்பாக்கிகள், பீரங்கியுடன் ராணுவ வீரர்களின் வாகனமும், ராணுவ கனரக தொழிற்சாலை வாகனமும், போர்க்கப்பலுடன் கடற்படை வாகனமும் அணிவகுத்து வந்தன. அணிவகுப்பு மரியாதைவாகன அணிவகுப்பை தொடர்ந்து, மத்திய-மாநில போலீஸ் படைகள், கடலோர பாதுகாப்பு குழு, ஆண்-பெண் தமிழ்நாடு கமாண்டோ படை, குதிரைப்படை, சிறைத்துறை படை, தீயணைப்புத்துறை, ஊர்க்காவல் படை, முப்படையின் தேசிய முதுநிலை மாணவர்கள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், சாரண- சாரணியர் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பும், அவர்களது இசைக்குழுவினரின் அணிவகுப்பும் நடந்தது. இந்த அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ரோசய்யா ஏற்றுக்கொண்டார்.அண்ணா பதக்கம் தொடர்ந்து, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வீ.கருப்பையா, கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தெப்பீஸ்வரன், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மறைந்த எஸ்.கோபிநாத் சார்பில் அவருடைய பிரதிநிதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வனக்காவலர் எஸ்.பி.ரகமதுல்லா, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர் மறைந்த ஏ.குணேந்திரன் சார்பில் அவருடைய மனைவி மற்றும் பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர் கே.பேச்சியம்மாள் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. உயிர் கொடுத்து உயிர் காத்தவர்கள்கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கடற்கரையில் கடந்த ஜனவரி 12-ந்தேதி கடலில் மூழ்கி கொண்டிருந்த இரு சிறுவர்களை காப்பாற்றிய, நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த எஸ்.கோபிநாத், ராட்சத அலையில் சிக்கி இறந்தார்.அதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி திருச்சி காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பசுமாடுகளை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் குணேந்திரன், ஆற்றில் மூழ்கி இறந்தார். இவர்களது கடமை உணர்வையும், துணிவுமிக்க செயலையும் பாராட்டி வீர, தீர செயலுக்காக 2014-ம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. அண்ணா பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்கமுலாம் பூசிய பதக்கமும், சான்றிதழுடன் பரிசுத்தொகை ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது.கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஏ.ஆர்.பஷீர் அகமதுக்கு வழங்கப்பட்டது.கள்ளச்சாராயத்தை தடுப்பதில் சீரிய பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் ஈரோடு மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் து.பெ.சுரேஷ்குமார், சென்னை தெற்கு மதுவிலக்கு மத்திய புலனாய்வு துணை-கண்காணிப்பாளர் ஆ.வே.மதி, சேலம் மண்டலம் மதுவிலக்கு மத்திய புலனாய்வு இன்ஸ்பெக்டர் ச.பெரியசாமி, ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் காவல் நிலைய தலைமைக்காவலர் ஆர்.தேவராஜ் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். வேளாண்மைத்துறை சிறப்பு விருதுதிருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தினை கடைபிடித்து அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மைத்துறை சிறப்பு விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறுபவருக்கு ரூ.5 லட்சமும், ரூ.3 ஆயிரத்து 500 மதிப்புள்ள பதக்கமும் கொடுக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, வேளாண்மைத்துறை சிறப்பு விருதை ஈரோடு மாவட்டம் நசியனூர் நல்லசாமி மகன் ந.பரமேஸ்வரன் பெற்றார். அவருக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா விருது வழங்கினார். பின்னர், பதக்கம் பெற்ற அனைவருடனும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள்அதன் பின்னர், கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. இதில், பள்ளி-கல்லூரி மாணவிகள் வண்ண உடையணிந்து, ‘எடுத்த காரியம் யாவிலும் வெற்றி...’ என்ற பாரதியார் பாடலுக்கு நளினமாக நடனம் ஆடினார்கள். முதலில், அசோக்நகர் சென்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் “சாட்டைக்கொம்பு” நடனம் ஆடினார்கள். அவர்களை தொடர்ந்து, சாந்தோம் செயின்ட் ரப்பேல்ஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் (தப்பாட்டம்), சென்னை ஜி.ஆர்டி.மகாலட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (கிராமிய நடனம்), சென்னை ராணிமேரி மகளிர் கல்லூரி (பொய்க்கால், கரகட்டம், ஒயிலாட்டம்), எழும்பூர் எத்திராஜ் மகளிர் கல்லூரி (மயிலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம்), சென்னை குருஸ்ரீ சாந்தி விஜய் ஜெயின் மகளிர் கல்லூரி (பஞ்சாப் பாரம்பரியம் கலந்த கிராமிய நடனம்) மாணவிகள் நடனமாடி வந்தனர். தொடர்ந்து, தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கிராமியக்கலை நிகழ்ச்சிகளான ஒடிசா “சாம்பல்புரி” கிராமிய நடனம், குஜராத் “கார்பா” நடனம், மணிப்பூர் “டோல் சோலம்” நடனத்தை தொடர்ந்து செய்தித்துறை சார்பில் நையாண்டி மேளம் மற்றும் பின்னால் கோலாட்டம், ‘பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம்’ ஆகியவை நடைபெற்றன. அலங்கார ஊர்திகள்இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து, தமிழக அரசு துறைகள் சார்பாக அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடந்தது. இதில், நாதஸ்வர இசையுடன் செய்தி-மக்கள் தொடர்புத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, கூட்டுறவுத்துறை, பள்ளிக்கல்வித் துறை, தீயணைப்பு துறை, சுற்றுலாத்துறை, தோட்டக்கலை துறை வாகனங்கள் உள்பட 25 துறைகளின் வாகனங்கள் அணிவகுத்து வந்தன. சரியாக காலை 9.22 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. குடும்பத்துடன் கண்டுகளிப்புகுடியரசு தின விழா நிகழ்ச்சிகளை அனைவரும் கண்டுகளிக்க வசதியாக காந்தி சிலையின் இருபுறமும் சுமார் ½ கிலோ மீட்டர் நீளத்திற்கு பந்தல் போடப்பட்டு இருந்தது. சிலையின் இடது பக்கம் கவர்னர் ரோசய்யா, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சபாநாயகர் ப.தனபால், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால் மற்றும் அமைச்சர்கள், அரசு செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், துணை-வேந்தர்கள், முக்கிய பிரமுகர்கள் அமர்ந்து இருந்தனர். வலது பக்கம் சென்னையில் உள்ள பல்வேறு நாடுகளின் துணைத்தூதர்கள், தூதரக அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பொதுமக்கள் என பல ஆயிரக்கணக்கானோர் குழுமி இருந்தனர். இதைத்தவிர, மேடைக்கு எதிரே சாலையோரத்திலும் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் நின்று குடியரசு தின நிகழ்ச்சிகளை உற்சாகமாக கண்டுகளித்தனர். அப்போது, மாணவிகளின் நடனம், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஆகியவற்றை கைதட்டி உற்சாகப்படுத்தியதுடன், பலர் தங்களின் காமிரா செல்போனில் படம் பிடித்துக்கொண்டனர். விழா தொடக்கத்தில் சற்று சாரல் மழை தூவியதால் இதமான காலநிலை காணப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H