Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
EDNL NEWS
‘2017-18-ம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும்’ சூரியனின் செயல்பாட்டை ஆராய ‘ஆதித்யா’ செயற்கைகோள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல் :
‘2017-18-ம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும்’ சூரியனின் செயல்பாட்டை ஆராய ‘ஆதித்யா’ செயற்கைகோள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல் :
சூரியனின்
செயல்பாட்டை ஆராய ‘ஆதித்யா’ செயற்கைகோள் 2017-18-ம் ஆண்டில் விண்ணில்
ஏவப்படும்’ என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார். நிறைவு விழாசேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்ததின நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில்,
பெங்களூர் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயல்திட்ட இயக்குனர்
டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு, விவேகானந்தரின் பிறந்தநாள்
விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- சந்தர்ப்பம் முக்கியம்சந்திரன்,
செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து தற்போது சூரியனையும் ஆராய வேண்டும் என்ற
எண்ணம் தோன்றியுள்ளது. விண்வெளியில் நான் செய்த சின்ன சின்ன சாதனைகள் தான்
என்னை இந்தளவிற்கு உயர்த்தி காட்டுகிறது என்றால் அது மிகையாகாது. இன்றைய
கால கட்டத்தில் சந்தர்ப்பம் என்பது மிக மிக குறைவு. வாழ்க்கையில்
சந்தர்ப்பம் கிடைக்கும்போது நேர்திசையுடனும், வேகத்துடனும் செயல்பட்டால்
எதையும் சாதிக்க முடியும். சந்தர்ப்பங்கள் கிடைப்பதைவிட கிடைத்த
சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 1982-ல்
பெங்களூரில் சாதாரண விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இருந்தது. அதன்பிறகு
நாளடைவில் நாசா, ஈசா என உலகத்தரத்திற்கு இணையாக தற்போது அங்கு விண்வெளி
ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்திலும் விண்வெளி
ஆராய்ச்சி நிலையம் விரைவில் உருவாக வாய்ப்புள்ளது.’ இவ்வாறு அவர் கூறினார்.‘ஆதித்யா’ செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும்இதைத்தொடர்ந்து, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-‘சந்திரயான்
விண்கலத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. தற்போது சந்திரயான்-2
திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு
அனுப்பப்பட்டுள்ள மங்கல்யான் விண்கலம் சுமுகமாக சென்று கொண்டிருக்கிறது.
வருகிற செப்டம்பர் மாதம் 24-ந் தேதி செவ்வாய் கிரக சுற்றுபாதையை
சென்றடையும். சந்திரன், செவ்வாய் கிரக ஆராய்ச்சியை அடுத்து
சூரியனின் செயல்பாட்டை ஆராய்ச்சி செய்ய ‘ஆதித்யா’ செயற்கை கோள் விண்ணில்
ஏவப்பட உள்ளது. இதன் மூலம் சூரியனின் இயக்கத்தை முழுமையாக ஆய்வு செய்ய
முடியும். ‘ஆதித்யா’ செயற்கை கோள், 2017-18 ம் ஆண்டில் விண்ணில் ஏவப்படும்.
அதற்கான பணியை மேற்கொண்டுள்ளோம். அறிவியல் துறையில் இந்தியாவின் வளர்ச்சி
சிறப்பாக உள்ளது. மற்ற நாடுகளுக்கு இணையாக நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம்’
இவ்வாறு அவர் கூறினார். Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








